Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள சமசப்தக் யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்! -
கொத்தமல்லி மாங்காய் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாருங்க.. -
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா?
சிங்கிளாக இருக்கும் ஆண்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? ஆய்வு சொல்லும் உண்மை என்ன?
ஒரு காதல் உறவில் இருப்பது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கலாம். அதற்காக சிங்கிளாக இருப்பது அவ்வளவு மோசமானதல்ல. சிங்கிளாக இருப்பது சுதந்திரத்தை அளிப்பதாக மட்டுமே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது பலரும் அறியாதது. இந்த நன்மைகள் தெரிந்தால் சிங்கிளாக இருப்பவர்கள் மீது பரிதாபத்திற்கு பதில் பொறாமைதான் வரும்.
மனிதராக பிறந்த அனைவருக்கும் ஒரு ஆதரவும், துணையும் தேவைப்படும் போது நாம் ஏன் சிங்கிளாக இருக்க வேண்டுமென்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுவது இயல்பானதுதான். ஆனால் ஆதரவு என்பது உங்களின் காதல் துணையாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, அது நம்முடைய குடும்பத்தினராகவோ அல்லது நெருங்கிய நண்பராகவோ கூட இருக்கலாம்.

சமீபத்திய ஆய்வின்படி, சிங்கிளாக இருப்பவர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக பிணைப்புடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், தேவைப்படும் போது உதவக்கூடிய சிறந்த நபர்களின் நெட்வொர்க்கையும் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. உறவில் இல்லாதவர்கள் தங்கள் சகாக்களிடம் அதிக கவனம் செலுத்துகிறார்கள், இதனால் உயர் முடிவுகளை அடைகிறார்கள். சிங்கிளாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
குறைவான மன அழுத்தம்
சிங்கிளாக இருக்கும் பெரும்பாலான நபர்கள் தங்கள் வாழ்க்கையில் குறைந்த அளவு மன அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். பொதுவாக மன அழுத்தம் உறவுகளால் மட்டுமல்ல, பிற காரணங்களாலும் ஏற்படுகிறது. நிதி அழுத்தத்தில் அவற்றில் மிக முக்கியமானது. நீங்கள் சிங்கிளாக இருக்கும்போது, நீங்கள் சம்பாதித்து அதை உங்களுக்காக செலவழிக்க வேண்டும், இதனால் இன்னொருவருக்கு செலவு செய்யும் சுமையைக் குறைக்கிறது. தங்கள் துணையை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற கவலை இருக்காது.
அதிக உடற்பயிற்சி செய்வார்கள்
சிங்கிளாக இருப்பவர்கள் அதிக நேரம் உடற்பயிற்சி செய்வதையும், பிட்டாக இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். இதற்குக் காரணம், அவர்கள் தங்களை அழகாகக் காட்ட விரும்புவதும், கூட்டத்தில் தங்களைத் தனித்துவமாக காட்ட விரும்புவதும் ஆகும். இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆதரவாகவும் செயல்படுகிறது மற்றும் இதய பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, சிங்கிளாக இருப்பவர்கள் ஜிம்மில் சேரும் விகிதம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சிங்கிளாகி இருக்கும் ஆண்கள் அவர்களின் உடல்நலம் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
நல்ல தூக்கம்
இதனை அனைவரும் அறிவார்கள், நீங்கள் இதற்கு முன்னால் ஒரு உறவில் இருந்திருந்தால், அது ஏற்படுத்தும் வித்தியாசத்தை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஒரு நல்ல இரவு தூக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது சுகாதார அமைப்புகளின் சரியான செயல்பாட்டுடன் தொடர்புடையது. நீங்கள் நன்றாக தூங்கும்போது, நீங்கள் சிறப்பாக கவனம் செலுத்த முடியும், இதன்மூலம் நீங்கள் சிறந்த மனநிலையுடன் இருப்பீர்கள்.
உங்களுக்கான நேரத்தை பெறலாம்
நீங்கள் உறவில் இருக்கும்போது, உங்கள் துணையை சந்தோஷப்படுத்த அவர்களின் வசதிக்கேற்ப நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுக்கான நேரம் என்பது மிகவும் குறைவாகவோ சில சமயம் இல்லாமலே போகலாம். சிங்கிளாக இருக்கும்போது மற்றவர்களை வசதியாக உணரவைக்க உங்கள் நேரத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை, உங்கள் சொந்த விருப்பங்களுக்கு ஏற்ப நீங்கள் வேலை செய்யலாம். உறவில் இருக்கும்போது நீங்கள் உங்களுக்காக நேரத்தை ஒதுக்க விரும்பினால், அது உங்கள் உறவை பாதிக்கலாம்.
மகிழ்ச்சியாக இருப்பீர்கள்
பல ஆய்வுகள் சிங்கிளாக இருப்பவர்கள், குறிப்பாக பெண்கள், திருமண உறவை சிங்கிளாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறுகின்றன. சிங்கிளாக இருக்கும் ஆண்களும் உறவில் இருப்பவர்களை வியா மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். ஆண்கள் சிங்கிளாக இருக்கும்போது மிகவும் வெளிப்படையானவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார்கள். சிங்கிளாக இருப்பவர்களுக்கு அவர்களின் இலக்குகளில் கவனம் செலுத்த அதிக நேரம் கிடைக்கிறது.



Click it and Unblock the Notifications

