Latest Updates
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் வீடு குளிர்ச்சியாக இருக்கணுமா? இந்த வாஸ்து செடிகளை உடனே மாற்றுங்க! -
Mothers Day 2026: உங்க அம்மாவுக்கு இந்த 'உயிர்காக்கும் மருத்துவ பரிசோதனைகள்' பரிசா குடுங்க.. ஹேப்பி ஆவாங்க.. -
வைகாசி மாதம் சூரியனின் ஆசியால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்!
தமிழ் சினிமாவின் மஜாவான நட்பு சார்ந்த பாடல்கள்... இதில் ஒன்றை ஸ்டேட்ஸில் வைத்து நண்பர்கள் தினத்தை கொண்டாடுங்க!
Friendship Day 2024: இந்தியாவின் நண்பர்கள் தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் அனைவரும் தங்கள் நெருங்கிய நண்பர்களை சந்திப்பதும் அல்லது போனிலாவது பேசுவதும் அவர்கள் நட்பை மதிப்பதையும், மறக்காமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. இப்போது ட்ரெண்டிங்கில் அனைவரும் வாட்ஸப்பில் ஸ்டேடஸ் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
நட்பு சார்ந்த வாட்ஸப் ஸ்டேடஸ் என்று வரும்போது நாம் அனைவரும் முதலில் தேடிச்செல்வது தமிழ் சினிமா பாடல்களைத்தான். தமிழ் சினிமாவில் நட்பைக் கொண்டாடிய திரைப்படங்களும், பாடல்களும் பெருமளவில் உள்ளன. அதில் சில பாடல்கள் எப்போதும் நம் கண்களில் கண்ணீரையும், மனதில் மகிழ்ச்சியையும் உருவாக்கும். நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர்களுக்கு டெடிகேட் செய்யக்கூடிய சிறந்த மற்றும் நெகிழ்ச்சியான பாடல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தளபதி
நட்பு சார்ந்த படம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மம்முட்டி நடித்த 'தளபதி' திரைப்படம்தான். இந்த திரைப்படத்தில் வரும் 'காட்டுக்குயிலு மனசுக்குள்ள' பாடல் நட்பின் மகத்துவத்தையும், நட்பையும் பெருமைப்படுத்தும் ஆகச்சிறந்த பாடலாக இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
காதல் தேசம்
ஏ.ஆர்.ரகுமானின் சகாப்தம் தொடங்கிய போது அதனை உறுதிப்படுத்திய ஆல்பம்தான் காதல் தேசம் திரைப்படத்தின் ஆல்பம். இந்த திரைப்படத்தில் இருந்த அனைத்து பாடல்களும் சிறப்பானதாக இருந்தாலும் இதில் வந்த நட்பை போற்றும் பாடலான ' முஸ்தபா முஸ்தபா' பாடல் எப்போதும் நிலைத்திருக்கும் நட்பு பாடலாகும். இதில் வரும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' வரிகள் பலரின் ரிங்டோனாக இருக்கிறது.
கண்ணெதிரே தோன்றினால்
நட்பைப் பற்றிய திரைப்படங்களில் மிகவும் குறைவாகக் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'கண்ணெதிரே தோண்றினால்'. இதில் வரும் 'ஈஸ்வரா வானும் மண்ணும் ப்ரண்ட்ஷிப் பண்ணுது உன்னால் ஈஸ்வரா' பாடல் நட்பின் பெருமையை சொல்லும் ஆனால் மிகவும் குறைவாக கொண்டாடப்பட்ட பாடலாகும்.
நட்புக்காக
நட்பை பிரதானமாகக் கொண்ட தமிழ் சினிமாவின் மற்றொரு வெற்றிகரமான திரைப்படங்களில் ஒன்று 'நட்புக்காக'. இரண்டு முதியவர்களுக்கு இடையே இருக்கும் நட்பை வலியுறுத்தும் பாடலான 'மீசைக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகம்டா' பாடல் மிகவும் பிரபலமான இன்றும் கொண்டாடப்படும் ஒரு நட்பு சார்ந்த பாடலாகும்.
ஏப்ரல் மாதத்தில்
கல்லூரி நட்புக்கென்று அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் உள்ளது. கல்லூரி நட்பை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் பிரிவு விழாவின் போது வரும் 'மனசே மனசே மனசில் பாரம்' இன்றும் கேட்பவரை அவர்களின் கல்லூரி நாட்களுக்கு அழைத்துச் செல்லும் சோகமான நட்பு பாடலாகும்.
சென்னை 600028
கிரிக்கெட், நட்பு, பிரிவு மற்றும் காதல் என அனைத்து உணர்வுகளும் கலந்த திரைப்படமான சென்னை 28 படத்திற்கு எப்போதும் ரசிகர்களிடம் தனி வரவேற்பு உள்ளது. இதில் வரும் 'வாழ்க்கையை யோசிங்கடா' மற்றும் 'நட்புக்களே பிரிவொன்று வந்தது' என இரண்டு பாடல்களுமே நட்பின் ஜாலியான காலகட்டத்தையும், சோகமான காலகட்டத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும்.
சக்கரக்கட்டி
இந்த திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இந்த படத்திற்கான முகவரியாக இருந்தது 'Taxi Taxi நண்பா நீ ஒரு இலவச Taxi' பாடல்தான். நவீன ப்ரெண்ட்ஷிப்பை விளக்கும் இந்த பாடல் இப்போதும் பலருக்கும் பிடித்த பாடலாக இருக்கிறது.
கதகளி
விஷால் நடித்த கதகளி திரைப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இருந்தாலும் அதில் வரும் ' இறங்கி வந்து ஆடு நண்பா' பாடல் நட்பை புகழும் மற்றொரு பிரபலமான பாடலாகும். இதிலுள்ள ' நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு' வரிகள் மிகவும் பிரபலமானது மற்றும் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் வரிகளாகும்.
வல்லினம்
தமிழ் சினிமாவின் மிகவும் Underrated திரைப்படங்களில் ஒன்று வல்லினம். கல்லூரி நட்பு மற்றும் விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாகும். இதில் வரும் 'மாமன் மச்சான் ப்ரெண்ட்ஷிப்பு' பாடல் அதிகம் பிரபலமாகாத ஒரு ஜாலியான நட்பு பாடலாகும். இதுவரை இந்த பாடலை நீங்கள் கேட்காமல் இருந்தால் இப்போதாவது கேட்டு உங்கள் நண்பருக்கு டெடிகேட் செய்யுங்கள்.
நண்பன்
பெயரிலேயே நண்பன் இருக்கும் இந்த திரைப்படத்தை இந்த பட்டியலில் சேர்க்கா விட்டால் அது பெரும் குற்றமாகும். நட்பை பெருமைப்படுத்தும் பாடல்கள் என்றால் அதில் நிச்சயம் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். இது ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் இதன் பாடல்கள் தனித்துவமானதாக இருக்கும்.
இதன் அறிமுகப்படலான 'என் பிரண்ட போல யாரு மச்சான்' பாடல் நட்பையும், நல்ல நண்பனையும் பெருமைப்படுத்துபவை. 'தோழனின் தோள்களும் அன்னை மடி அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி' இதைவிட நண்பனை புகழும் சிறந்த வரிகள் சமீப காலங்களில் இல்லை. இதில் வரும் மற்றொரு பாடலான 'நல்ல நண்பன் வேண்டுமென்று அந்த மரணம் நினைக்கிறதா' பாடலும் நட்பை பெருமைப்படுத்தும் சிறந்த பாடல்களில் ஒன்றாகும்.
ரத்தம் ரணம் ரௌத்திரம்
RRR என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் வெற்றியை நாம் அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடல் கொண்ட இந்த திரைப்படத்தில் நட்பை பெருமைப்படுத்தும் 'நட்பு' பாடலும் இந்த திரைப்படத்தில் உள்ளது. 'நாட்டு நாட்டு' பாடலின் புகழ் வெளிச்சம் இந்த அருமையான நட்பு பாடலை குறைத்து விட்டதே என்பதே உண்மை. இந்த பாடல் பல மொழிகளில் இருந்தாலும் தமிழ் மொழியில் அனிருத் குரலில் மற்ற மொழிகளை விட சிறப்பாக இருந்தது என்று அனைவராலும் கூறப்பட்டது.
இந்த பட்டியல் தவிர உங்களுக்கு மிகவும் விருப்பமான மற்ற ப்ரெண்ட்ஷிப் பாடல்கள் ஏதாவது இருந்தால் கமெண்டில் சொல்லுங்கள்.



Click it and Unblock the Notifications

