Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த 5 காரணங்களில் ஒன்றால்தான் 95% காதல் பிரேக்கப்பில் முடிகிறதாம்... இளைஞர்களே உஷாரா இருங்க...!
காதல் தோல்வி என்பது கிட்டதட்ட அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாததாகும். அதிர்ஷ்டவசமாக சிலரின் வாழ்க்கையில் இந்த துயரமான சம்பவம் வராமல் இருக்கலாம், அப்படியிருந்தால் அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.
காதல் தோல்வி அல்லது பிரிவு அனைவரின் வாழ்க்கையிலும் மனரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும், சில சமயங்களில் உடல்ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். காதல் முறிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் உளவியலாளர்கள் மற்றும் உறவு நிபுணர்களின் கூற்றுப்படி சில பொதுவான காரணங்கள் உள்ளன.

காதல் முறிவுகள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களில் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன, அவற்றைப் பற்றி நாம் அறிந்து கொண்டு, அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டு தவிர்க்க வேண்டியது அவசியம்.
நெருக்கம் இல்லாமை
ஒரு காதல் உறவுக்கு உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் நெருக்கம் மிகவும் முக்கியமானது. தம்பதிகள் உடல் நெருக்கம் அல்லது உணர்ச்சி நெருக்கம் குறைவதை உணரும் போது, அவர்கள் அதை சரி செய்ய உடனடியாக முயற்சிக்க வேண்டும். நெருக்கம் இல்லாதது உணர்ச்சிகரமான தூரத்தை உருவாக்கி, கூட்டாளர்களுக்கிடையேயான பிணைப்பை அழித்து, இறுதியில் பிரிவுக்கு பங்களிக்கும்.
கம்யூனிகேஷன் இல்லாமை
நாம் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும், காதல் முறிந்தவுடன்தான் மக்களுக்கு புரியும். தொடர்பாடல் பிரச்சனைகள் காதல் முறிவுக்கு முக்கிய காரணமாகும். தம்பதிகள் திறம்பட தொடர்பு கொள்ள தவிர்க்கும் போது, அது தவறான புரிதல்கள், தீர்க்கப்படாத மோதல்கள் மற்றும் உணர்ச்சிதியான தூரத்திற்கு வழிவகுக்கும்.
காலப்போக்கில் இது நம்பிக்கை, அடித்தளம் மற்றும் நெருக்கம் ஆகியவை சிதைந்து, இறுதியில் பிரிவுக்கு வழிவகுக்கும். இந்த சிக்கல்கள் ஒரு உறவில் நம்பிக்கை மற்றும் நெருக்கத்தின் அடித்தளத்தை அழிக்கின்றன.
மோசமான தொடர்பு பல்வேறு வடிவங்களில் வெளிப்படும், அதாவது உணர்வுகளை வெளிப்படுத்தாதது, உணர்ச்சிகளை அடக்குவது அல்லது தீர்வு இல்லாமல் அடிக்கடி வாதங்கள் செய்வது போன்ற வடிவங்களில்கம்யூனிகேஷன் பிரச்சினைகள் ஏற்படலாம்.
நம்பிக்கை மற்றும் துரோகம்
எந்தவொரு ஆரோக்கியமான உறவிற்கும் நம்பிக்கையே அடிப்படை. அது உடைக்கப்படும்போது, துரோகம் அல்லது பிற நம்பிக்கை சிக்கல்கள் ஏற்பட்டால், அதை மீண்டும் கட்டியெழுப்புவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
மற்ற சிக்கல்களால் பிரிந்த காதல் கூட ஒன்று சேரலாம் ஆனால் துரோகத்தால் பிரிந்த காதல்கள் மீண்டும் சேர வாய்ப்பில்லை. அப்படி ஒருவேளை மீண்டும் இணைந்தாலும் அதன் வடுக்கள் இருந்து கொண்டேதான் இருக்கும்.
உணர்ச்சிரீதியான துண்டிப்பு
உணர்ச்சிப் புறக்கணிப்பு மற்றும் துண்டிப்பு என்பது காதலில் ஒருவர் அல்லது இருவருமே உணர்ச்சிரீதியாக ஒருவருக்கொருவர் துண்டிக்கப்பட்டதாக உணரும்போது ஏற்படுகிறது. காலப்போக்கில், இது தனிமை, உணர்ச்சி அதிருப்தி மற்றும் அந்த உறவு அவர்களின் உணர்ச்சித் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற உணர்வுக்கு வழிவகுக்கும். உணர்ச்சித் தேவைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, பிரிவு தவிர்க்க முடியாததாக மாறுகிறது.
இணக்கமின்மை
இணக்கத்தன்மை என்பதை ரசனைகள், இலக்குகள், ஆர்வங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் குறிக்கிறது. காலப்போக்கில், தம்பதிகள் தாங்கள் அடிப்படை வழிகளில் சரியாகப் பொருந்தவில்லை என்பதை உணரலாம். இந்த வேறுபாடுகள் பெருகும் போது அது உறவில் குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் அதிருப்தி மற்றும் மகிழ்ச்சியற்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications

