For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஈகோ நிறைந்த மோசமான ஒருவரை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!

|

உங்கள் துணை மேலாதிக்கம் மற்றும் அகங்காரத்துடன் இருக்கும்போது அது மிகவும் தெளிவாகத் தெரியும். தொடர்ச்சியான சண்டைகள், அதிகார மாற்றம் ஆகியவை உங்கள் உறவில் அவர் உங்களை வெல்ல முயற்சிக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக இருக்கலாம்.

Symptoms of a Dominant Boyfriend in a Relationship in Tamil

உங்களை எப்போதும் தாழ்ந்தவராக உணர மட்டுமே முயற்சிக்கும் ஒருவருடன் இருப்பது உண்மையில் காதல் உறவில் தீராத துயரத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும். உங்கள் காதலர் மிகவும் ஆதிக்கம் செலுத்தக்கூடியவராக இருக்கலாம் என்ற உணர்வு உங்கள் உள்ளத்தில் இருந்தால், அதனை உறுதிப்படுத்த இந்த அறிகுறிகள் உங்களுக்கு உதவும். இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஹிட்லரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறாமை மற்றும் பொஸசிவ் எண்ணம் கொண்டவராக இருப்பார்

பொறாமை மற்றும் பொஸசிவ் எண்ணம் கொண்டவராக இருப்பார்

நீங்கள் வேறொவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் உங்கள் காதலர் நம்பமுடியாத பொறாமை கொண்டால், அது கவலைப்பட வேண்டிய விஷயமாக இருக்கலாம். பொறாமை பெரும்பாலும் எதிர்மறையானது மற்றும் அது ஆதிக்கம் மற்றும் மேன்மையால் ஆதரிக்கப்படும் நியாயமற்ற நடத்தையை ஏற்படுத்தும். அவர்கள் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள், மேலும் சிறிது காலத்திற்கு உங்கள் நண்பர்களைத் தவிர்க்கச் சொல்வார்கள்.

உங்களுக்கான ஸ்பேஸ் என்னவென்பதே அவர்களுக்குத் தெரியாது

உங்களுக்கான ஸ்பேஸ் என்னவென்பதே அவர்களுக்குத் தெரியாது

ஒரு உறவில் தனிப்பட்ட ஸ்பேஸ் எப்படி இருக்கும் என்பதை உங்கள் காதலர் புரிந்து கொள்ளவில்லை என்றால், எப்போதும் உங்கள் எல்லைகளை எந்த தயக்கமும் இன்றி கடந்து செல்கிறார் என்றால், அவர் தனது ஆளுமையால் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்று அர்த்தம். உங்கள் உணர்வுகளைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார், ஆனால் அவர் உங்கள் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள்.

நீங்கள் எப்போதும் அவருக்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது

நீங்கள் எப்போதும் அவருக்காக இருக்க வேண்டும் என்று நினைப்பது

நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எப்போதும் நீங்கள் அவருக்கு கிடைக்க வேண்டும் என்று ஒரு மேலாதிக்க ஆண் விரும்புவார். அவரை மறுப்பது அல்லது தவிர்ப்பது போன்ற வாய்ப்புகள் உங்களுக்கு கொடுக்கப்படவே மாட்டாது. அதனை நீங்கள் செய்ய துணிந்தால் அல்லது வேறு வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவர்கள் அளவில்லா கோபத்திற்கு ஆளாவார்கள்.

உங்களுடன் இருக்கும் அனைவரையும் விமர்சிப்பார்கள்

உங்களுடன் இருக்கும் அனைவரையும் விமர்சிப்பார்கள்

உங்கள் துணை உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரையும் மிகவும் விமர்சிப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர் ஒவ்வொருவருக்குள்ளும் தவறுகளைக் கண்டுபிடிப்பார், மேலும் அவற்றை முன்னிலைப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். நீங்கள் யாரைச் சந்திக்க வேண்டும் அல்லது சந்திக்கக்கூடாது என்பதில் அவர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார். இறுதியில், உங்கள் வாழ்க்கையில் உள்ளவர்களிடமிருந்து மெதுவாக நீங்கள் துண்டிக்கப்படுவீர்கள்.

அனைத்திற்கும் உங்களை குறை கூறுவார்கள்

அனைத்திற்கும் உங்களை குறை கூறுவார்கள்

உங்கள் காதலர் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் உங்களைக் குறை கூறுவதை நீங்கள் காண்பீர்கள், அது அவருடைய தவறாக இருந்தாலும் கூட உங்கள் மீதுதான் பழி சுமத்துவார்கள். உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இது அவருடைய குறுக்கு வழி. யாரும் பழி மற்றும் குற்றத்தின் முடிவில் இருக்க விரும்ப மாட்டார்கள், குறிப்பாக அது உங்களின் தவறு இல்லை என்றால். உங்கள் தவறு இல்லாவிட்டாலும், ஒரு ஆதிக்க மனப்பான்மை கொண்ட மனிதர் உங்களை குற்றவாளியாக உணர வைக்க வழிகளைக் கண்டுபிடிப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms of a Dominant Boyfriend in a Relationship in Tamil

Check out the symptoms of a dominant boyfriend in a relationship.
Story first published: Wednesday, January 19, 2022, 17:42 [IST]
Desktop Bottom Promotion