For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க லவ்வர் மேல நீங்க வச்சிருக்க அன்பை எப்படி வெளிப்படுத்தலாம் தெரியுமா?

உண்மையான அன்பை வெளிப்படுத்த, எதிர்காலத்தில் உங்கள் காதலுடன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். தினமும் தூங்குவதற்கு முன், சில நிமிடங்கள் கற்பனை செய்யவும்.

|

பண்டிகை காலம் வந்துவிட்டது, அனைத்து ஜோடிகளும் ஒன்றாக ஷாப்பிங் செய்யத் தொடங்கியுள்ளனர், பண்டிகைகளை ஒன்றாக அனுபவித்து இருக்கலாம். சில நேரங்களில் நீங்கள் தனியாக இருக்கும்போது, உங்கள் இதயத்தில் உள்ள வெற்றிடம் உங்களை பாதிக்கலாம். உலகில் ஒரு நபரை விரும்பாத ஒரு ஆத்மாவும் இல்லை. உலகம் காதலால் நிரம்பி வழிகிறது. காதல் இல்லாத மனிதர்களே கிடையாது. காதலிக்காத ஆட்களே கிடையாது. இவ்வுலகில் எல்லாரும் ஏதாவது ஒன்றை அதிகமாக காதலிக்கலாம். அன்பின் அரவணைப்பு ஒவ்வொருவருக்கும் எப்போதும் தேவை.

How to manifest true love in your life

நீங்களும் உண்மையான அன்பை தேடுகிறீர்கள் என்றால் பகல் கனவு காண்பதற்கு பதிலாக, உங்கள் வாழ்க்கையில் உண்மையான அன்பை வெளிப்படுத்த சில விஷயங்களை செய்யலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளை முயற்சி செய்து, உங்கள் வாழ்க்கையில் உண்மையான அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தம் செய்தல்

சுத்தம் செய்தல்

உங்களைச் சுற்றி சுத்தமாக இருக்கும் இடத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். சுத்தம் நேர்மறைக்கு இடமளிக்கிறது. அது உங்கள் மீதான பார்வையை சரியாக காட்டும். அதுதான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்குத் தேவை. நீங்கள் உணர்ந்திருந்த இருள் போக வேண்டும். இதில் உங்கள் பணியிடம், உங்கள் அறை, உங்கள் வீடு, கார் மற்றும் உங்கள் பையை சுத்தம் செய்வது அடங்கும். நீங்கள் சுத்தமாக இருப்பது என்பது ஒருவரை ஈஸியாக உங்கள் பக்கம் இழுக்கும்.

உங்களுக்கு என்ன வேண்டும்?

உங்களுக்கு என்ன வேண்டும்?

உங்கள் வாழ்க்கையின் அன்பை வெளிப்படுத்த, நீங்கள் முதலில் ஒரு கூட்டாளரிடம் என்ன தேடுகிறீர்கள் என்பதைப் பற்றி தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பும் இந்த வாழ்க்கையை எப்படி கற்பனை செய்கிறீர்கள்? ஒரு டைரியில், உங்கள் கூட்டாளரிடம் நீங்கள் என்ன வகையான பண்புகளைத் தேடுகிறீர்கள் என்று எழுதுங்கள். எதிர்காலத்தில் அவருடனான உங்கள் சிறந்த நாள் எப்படி இருக்கும் என்பதை எழுதுங்கள். உங்கள் கணவர் உணவு தயாரிப்பது போன்ற அமைதியான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கலாம். உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உங்கள் குழந்தைகளும் நீங்களும் விளையாடுவது போன்ற ஆசைகள் மற்றும் விருப்பங்களை எழுதுங்கள்.

நன்றியுணர்வு

நன்றியுணர்வு

எல்லாவற்றிற்கும் நன்றியைக் காண்பிப்பது முக்கியம். ஏனென்றால் நாம் எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும் நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். மற்றவர்களிடம் இல்லாத ஒன்றை நீங்கள் எப்போதும் பெறுவீர்கள். எனவே நன்றி உணர்வுடன் இருங்கள். இது உங்களை நேர்மறையான நபராக மாற்றும் மேலும் தெளிவான பார்வை கொண்ட வாய்ப்புகளையும் நீங்கள் காண்பீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியை சேர்க்கும்.

சுய பாதுகாப்பு

சுய பாதுகாப்பு

நீங்களும் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில விஷயங்களை நீங்கள் உங்களுக்காக செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் நீங்களே ஒரு மசாஜ் செய்து கொள்ளுங்கள், வழக்கமான தோல் பராமரிப்பு செய்யுங்கள், தியானம் செய்யுங்கள். இதனால், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் மற்றும் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்துகிறீர்கள். இது நன்மையையும் ஈர்க்கிறது.

காட்சிப்படுத்தல்

காட்சிப்படுத்தல்

உண்மையான அன்பை வெளிப்படுத்த, எதிர்காலத்தில் உங்கள் காதலுடன் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். தினமும் தூங்குவதற்கு முன், சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பது மிகவும் சாத்தியம் என்று நீங்கள் ஆழமாக நம்புவது முக்கியம். முயற்சி செய்யுங்கள், நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to manifest true love in your life

Here we are explain how to manifest true love in your life.
Story first published: Saturday, October 16, 2021, 18:35 [IST]
Desktop Bottom Promotion