பாலியல் துன்புறுத்தல் பற்றி சொன்னால் இப்படித் தான் தண்டனை கிடைக்கிறது! # My story 127

Subscribe to Boldsky

இங்கே பலருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனையே எது காதல் எது காமம் என்று பிரிக்கத் தெரியததனால் தான் ஏற்படுகிறது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இதே பிரச்சனை தான்.

காதல் எந்த வயதில் வேண்டுமானாலும் வரட்டும்... ஆனால் காம உணர்வும் நாம் சொல்வதைக் கேட்டுத் தான் வருகிறதா என்ன? அப்படியே வந்தாலும் அதனை தனித்து பிரித்துணர சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா?

பிரித்துணரவே தெரியாத போது எங்கிருந்து அதனை கையாளத் தெரிந்திருக்க முடியும். இங்கே தான் காதல் என்று பேச்சை எடுத்தாலே பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஊருக்குப் போறோம் :

ஊருக்குப் போறோம் :

காதல் என்ற வார்த்தை கூட எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத வயது. ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். குடும்பத்துடன் தம்பிக்கு மொட்டையடித்து காது குத்த ஊருக்குச் சென்றோம்.

எல்லா குடும்ப உறவுகளும் சங்கமித்து தடபுடல் விருந்து என்று கலை கட்டியது. இரண்டு நாட்கள் வீடு முழுவதும் ஆட்கள் தார்ச்சாலைகளே பார்த்துப் பழகிய நகரத்து குழந்தையான எனக்கு அங்கே தோட்டமும், ஊஞ்சலும்,கிணறும்,ஊரணியும் பிடித்தமான இடங்களாக மாறிவிட்டன.

கிச்சு கிச்சு தாம்பலம் :

கிச்சு கிச்சு தாம்பலம் :

ஹேண்ட் கிரிக்கெட் என்றும் ராக் பேப்பர் சிச்சர்.... என்று பட்டும் படாமலும் ஒரேயிடத்தில் உட்கார்ந்து விளையாடிய எனக்கு இங்கே இவர்கள் விளையாடுகிற தட்டாங்கல், கிச்சுகிச்சு தாம்பலம், நொண்டி, கண்ணாமூச்சி, கல்லாங்காய், கிட்டிப்புள்,பச்சக்குதிர, கல்லா மண்ணா,எல்லாமே புதுமையாக இருந்தது.

தெரியாமல் ஒதுங்கி நின்றாலும் சரி சரி... ஒப்புக்குச்சப்பாணி என்று ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் அவர்களுடன் காலம் முழுவதும் விளையாடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தோன்றும்.

Image Courtesy

குழந்தைகள் மட்டுமா :

குழந்தைகள் மட்டுமா :

காலையில் பரபரப்பாக நான் முழுங்குகிறேனா இல்லையா என்று கூட பார்க்காமல் வாயில் திணித்து வேக வேகமாக கிளப்பி பள்ளி வேனில் திணித்து அனுப்பிவிட்டு இரவு வந்து பக்கத்து வீட்டில் பசியுடன் தூங்கியிருக்கும் என்னை எடுத்து வீட்டுக் கட்டிலில் போடும் அப்பா அம்மாவுடன் வாழ்ந்த எனக்கு,

இங்கே சித்தி,அத்தை,பாட்டி,பெரியப்பா, அண்ணி, சித்தப்பா, தாத்தா என அத்தனை உறவுகளும் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

Image Courtesy

இது தான் சொர்க்கம் :

இது தான் சொர்க்கம் :

பெரியப்பாவுடன் ஊரணியில் நீச்சல் விளையாடியது, அத்தைமார்களுடன் பல்லாங்குழி,தாயம் விளையாடியது, ஒற்றைக்கையில் பம்பரத்தை சுழற்றி அதனை எங்கள் கைகளில் வைக்கும் சித்தப்பா, வேகமா சோறு தின்னா காத்தாடி விடலாம் என்று எங்களை எல்லாம் மாட்டு வண்டியில் ஏற்றி காத்தாடி விடப் பழக்கிய தாத்தா.

பாட்டிக்குத் தெரியாமல் எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து சமையல் பொருளை திருடி வந்து கூட்டாஞ்சோறு சமைக்க. அடுப்ப பத்த வைங்கடா என்று சொல்லி சுள்ளிகளை பொருக்கி நெருப்பு மூட்டி உடனிருந்த பாட்டி என்று ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யங்கள் நிறைந்த புது உலகம் அது.

Image Courtesy

பிரிந்த நேரம் :

பிரிந்த நேரம் :

தம்பிக்கு காது குத்து முடிந்துவிட்டது. எங்களையும் அம்மாவையும் ஊரில் விட்டு விட்டு அப்பா மட்டும் ஊருக்கு கிளம்பி விட்டார். ஒவ்வொருவாரக தத்தமது வீடுகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

வீடே களையிழந்து.... எனக்கு விளையாட துணையின்றி வெறிச்சோடிக்கிடந்தது. அவ்வப்போது தாத்தாவும் பாட்டியும் தான் எனக்கு விளையாட்டுக்கு வந்தார்கள் அவர்களுடனும் நீண்ட நேரம் விளையாட முடியாது. தனியாக இருக்கும் நேரம் அதிகரித்தது. தனியாக இருந்தாலும் நானாக காத்தாடி செய்வது, காகிதத்தில் பூக்களை செய்வது, என்று எதையாவது செய்து கொண்டிருப்பேன்.

Image Courtesy

தம்பிக்கு மருதாணி :

தம்பிக்கு மருதாணி :

அன்றும் அப்படித் தான் பாட்டி அரைத்து கொடுத்த மருதாணியை தூங்கிக் கொண்டிருந்த தம்பியின் விரல்களுக்கு வைத்துக் கொண்டிருந்தேன்.

அடேய் தங்கம் உங்க தம்பி பாப்பாக்கு மருதாணி வைக்கிறீங்களா என்று கிள்ளினான் யாரென்றே தெரியாத ஒருவன்.

ஸ்ஸ்.... ஆ என்று கத்தி கன்னத்தை துடைத்துக் கொண்டேன். பாப்பா பேரென்ன? மாமா தெரியுதா? கைக்குழந்தையா இருக்குறப்போ பாத்தது என்று கன்னங்களை தடவியபடியும் எனக்கு கிச்சு கிச்சு மூட்டியபடியும் கேட்டுக் கொண்டிருந்தான்.

Image Courtesy

இப்பதான் வழி தெரிஞ்சதா :

இப்பதான் வழி தெரிஞ்சதா :

ஒரு கட்டத்தில் கடுப்பாகி மருதாணி இருந்த கிண்ணத்தை அங்கேயே போட்டுவிட்டு அடுக்களைக்குள் ஓடினேன். அவனும் பின்னாடியே ஓடிவந்தான். நான் ஓடி வந்த வேகத்தில் பாட்டியை வேகமாக மோத....

கிச்சனுக்குள்ள எல்லாம் ஓடக்கூடாது பாப்பா.... என்று கடிந்து கொண்டார். பாட்டி சொல்வதை கேட்காமல் அவன் பின்னால் வருவதை பார்த்து பாட்டி பின்னாலேயே ஒளிந்து கொண்டேன்.

எதோ உறவினர் போல :

எதோ உறவினர் போல :

பாட்டி அவனை பார்த்து விட்டார். வாடா.... மவனே இப்பத்தான் வீட்டுக்கு வழிதெரிஞ்சதா விஷேசத்துக்கு பத்திரிக்க வச்சா விஷேசம் முடிஞ்சு ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு வர்ற.... உங்க அம்மா வர்லையா என்று அவனுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

அம்மா வந்தார். தூக்கிக் கொள்ள சொல்லி அடம்பிடித்தேன்.

மாமா ஐஸ் வாங்கித் தருவாறு :

மாமா ஐஸ் வாங்கித் தருவாறு :

வாங்க மாமா தூக்குறேன் என்று என்னை இழுக்க நான் அவனுடன் செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்து வீறிட்டு அழுதேன். மாமா டீ.... மாமா கடைக்கு கூட்டிட்டு போவாரு....

ஐஸ் வாங்கித்தருவாரு எதேதோ சாக்கு சொன்னார்கள் நான் அவனுடன் செல்லமாட்டேன் என்று வீம்பாக அம்மாவை இறுக்கமாக கட்டிக் கொண்டேன். அவன் பிடிவாதமாக என்னை இழுத்துக் கொண்டிருந்தான்.

என் சத்தம் கேட்டு வந்த தாத்தா.... புள்ளைய அழ வைக்காதீக காச்ச வந்துரும் என்று சொல்லி நடுவில் புகுந்து என்னை தூக்கிக் கொண்டார்.

Image Courtesy

வாழையிலையில் விருந்து :

வாழையிலையில் விருந்து :

அன்றைக்கு முழுவதும் அவன் எங்கள் வீட்டிலேயே இருந்தான். மதியம் வாழையிலையில் நிறைய தின்பண்டங்களுடன் அவனுக்கு சோறு பரிமாறினார்கள்.

வக்கணையாய் சாப்பிட்டான்.

Image Courtesy

வருகை அதிகரித்தது :

வருகை அதிகரித்தது :

அவன் எங்கள் வீட்டிற்கு தினமும் வர ஆரம்பித்தான். வரும் போதேல்லாம் எனக்கும் தம்பிக்கும் எதாவது வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தான். எழுத்துக்களை வைத்து உருவங்களை வரையக் கற்றுக் கொடுத்தான்.

எதோ கணக்குப் புதிரைச் சொல்லி எதிரில் இருப்பவர் நினைக்கும் எண்ணை கண்டுபிடிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தான்.

அம்மா திட்டும் போது :

அம்மா திட்டும் போது :

கிணற்றடியில் தண்ணீரை இறைத்து உடலெல்லாம் ஈரமாக்கிக் கொண்டிருந்ததை உள்ளிருந்த பார்த்த அம்மா மத்துடன் அடிக்க ஓடி வந்தார்.

டிரஸ்ஸ ஏன் இப்டி ஈரமாக்கி வச்சிருக்க.... யாரு இப்போ உன்னைய இங்க வர சொன்னது? அப்பாக்கு போன் போடவா என்று மிரட்டி என்னை பிடிக்க ஓடி வந்தார். பின் பக்கத்திலிருந்து அம்மாவிடமிருந்து தப்பிக்க நினைத்து வாசலுக்கு வந்தேன். அவன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக் கொண்டிருந்தான். அவன் பின்னால் மாமா மாமா... என்று ஒளிந்து கொண்டேன். அம்மாவும் பின்னாலேயே வந்தார்.

உடனே அவன் தூக்கிக் கொண்டான்.

திட்டாதக்கா குழந்தைய :

திட்டாதக்கா குழந்தைய :

இறக்குடா அவள.... காலைல இருந்து சொல்றேன் கேக்காம அவ்ளோ நேரம் தண்ணிலயே இருக்கா.... டிரஸ் பூரா ஈரம் அடிச்சா தான் அவளுக்கு புத்தி வரும் இங்க வா நீ... என்று என்னை அடிக்க பாய்ந்தாள் அம்மா.

என்னை தன் தோலில் சாய்ந்தபடி திருப்பிக் கொண்டான். குழந்த தான விடுங்கக்கா.... என்று உள்ளே தூக்கிச் சென்றான். இருந்தாலும் அவனை மீறி அம்மா முதுகில் ஒரு அடி வைக்க.... ஓங்கி அழ ஆரம்பித்தேன்.

வேலை காட்டினான் :

வேலை காட்டினான் :

அம்மாவிடம் எனக்கான உடையை வாங்கிக் கொண்டான். யாரும் வராத... உள்ளிருந்து பார்க்க முடியாத முன் வாசல் முற்றத்தில் உட்கார்ந்து கொண்டு தண்ணீல விளையாடலாமா? வழுக்கி விழுந்தா என்னாகுறது... பாரு டிரஸ் பூரா ஈரம் என்று என்னை சமாதனப்படுத்திக் கொண்டே உடையை மாற்றினான்.

உடையை மாற்றிவிடும் சாக்கில் என்னுடைய ப்ரைவேட் பார்ட்ஸில் கை வைப்பதும், கிள்ளுவதும், என்னை சமாதனப்படுத்துகிறேன் என்று கொஞ்சுவதும் நீண்ட நேரம் தொடர்ந்தது.

அவற்றை விட ஈரத்துணியை கழற்றிவிட்டு நீண்ட நேரம் நிர்வாணமாய் நிற்க வைத்திருந்தான்.

இது தான் அன்பு :

இது தான் அன்பு :

அப்போதுஇவன் செய்வது தவறு என்று புரியவில்லை. சாதரணமாக நான் விளையாடுவதை கூட அம்மா தடுக்கிறாள், அடிக்கிறாள் அப்போது அவரிமிருந்து என்னை காப்பாற்றியது இவர் தான்.

எத்தனை அன்பாக பேசுகிறார் என்று அவர் மீதான அபிப்ராயத்திலும் அம்மா முதுகில் அடித்த அடியிலும் இவனின் விளையாட்டுக்களை பெரிதுபடுத்தவில்லை.

உடையை மாற்றி ஐஸ் வாங்கிக் தருகிறேன் என்று சொல்லி வெளியில் தூக்கிச் சென்றான்.

தொடர்ந்தது :

தொடர்ந்தது :

எனக்கு ஐஸும் தம்பிக்கு பிஸ்கட்டும் வாங்கிக் கொடுத்தான் வரும் வழியில் விற்றுக் கொண்டிருந்த பலூனை வெறித்து பார்க்க.... அதையும் வாங்கி திணித்தான். திக்குமுக்காடிப் போனேன். வெளியில் தூரலடித்தாலே வெந்நீரை குடிக்க கொடுத்து படுத்தும் அம்மா அப்போது ராட்சசியாகவே தெரிந்தாள்.

பாப்பாக்கு இனி எது வேணும்னாலும் இந்த மாமாட்ட கேக்கணும் சரியா என்று சொல்லிக் கொண்டே வழி நெடுகிலும் முத்தம் வைத்துக் கொண்டே வந்தான். ஏனோ இம்முறை அந்த முத்தத்தை தட்டி விட வில்லை.

அதன் பின் தினமும் வருவதும் என்னைச் சீண்டுவதும் தொடர்ந்தது. இந்த மாமா என் மேல எவ்ளோ பாசமா இருக்காங்க.... என்று நினைக்க ஆரம்பித்தேன். அவன் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறான் என்று புரிந்து கொள்வதற்கு பதிலாக என் மீது அதீத அன்புடன் நடந்துக் கொள்கிறான் என்று நம்ப ஆரம்பித்தேன்.

Image Courtesy

வலிக்குது மாமா :

வலிக்குது மாமா :

ஒரு கட்டத்தில் வலிக்குது மாமா என்றேன் அவனிடம்....

வலிக்குதா எங்க வலிக்குது.... பாப்பாக்கு ஏன் வலிக்குது என்று கேட்டுக்கொண்டே தான் செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் எரிச்சலாகி விலகியோட.... நீயும் மாமா செய்ற மாதிரியே செய் உனக்கு வலிக்காது என்று சொன்னதோடு என்னைச் செய்யவும் வர்புறுத்தினான்.

ஒரு கட்டத்தில் எனக்கு அதிக பயம் ஏற்பட விலகி ஒடினேன். ஒடவிடாமல் இறுக்கிப் பிடிக்க....சத்தமாக கத்தி அழுதேன்.

Image Courtesy

அம்மா :

அம்மா :

என் அழுகுரலைக் கேட்டு உள்ளிருந்த அம்மா வெளியே வந்தார்.

படில விளையாண்டுட்டு இருந்தா அப்டியே கால் தடுக்கி கீழ விழுந்தாட்டாக்கா... என்று சமாளித்தான். சொல்ற பேச்ச எங்க கேக்குறா இங்க வா அடிப்பட்டிருக்கான்னு பாக்குறேன் என்று அழைத்தார்.

சட்டென அதெல்லாம் ஒண்ணுமில்லக்கா கால தேச்சு விட்டுட்டேன் பயத்துல அழற சரியாப்போய்டும் என்று என்னை தூக்கி சமாதனப்படுத்துவது போல் வெளியில் நடக்க.... அம்மா உள்ளே சென்று விட்டார்.

Image Courtesy

அப்பா :

அப்பா :

கிட்டதட்ட பதினைந்து நாட்கள் கழித்து எங்களை அழைத்துச் செல்ல அப்பா வந்திருந்தார். இப்போது அந்த மாமாவைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் அளவிற்கு வெறுப்பில் இருந்தேன்.

அவன் எதோ தவறு செய்கிறான், அவன் செய்வது எனக்கு பிடிக்கவில்லை, என்னை வற்புறுத்துகிறான் என்று புரிந்த எனக்கு அதை எப்படி சொல்வது? யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை.

தம்பியை மடியில் வைத்துக் கொண்டு அப்பா தாத்தாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவன் வாசலில் ஏறுவதைப் பார்த்து பயத்துடன் அப்பாவின் மேல் ஏறிக் கொண்டேன்.

Image Courtesy

என்னை யாராவது நம்புங்களேன் :

என்னை யாராவது நம்புங்களேன் :

வந்தான். எப்டீ இருக்கீங்க.... விஷேசத்துக்கு வர முடியல என்று அப்பாவிடம் பேச்சுக் கொடுத்தான். பாப்பா செம்ம வாயி என்று என் கண்ணத்தை தடவ தட்டி விட்டேன். வா.... பலூன் வாங்கித்தரேன் என்று என்னை இழுக்க நான் அப்பாவை இறுக்க கட்டிக் கொண்டு வரமாட்டேன் என்று அடம்பிடித்தேன்.

அப்பாவ பாத்ததும் மாமாவ மறந்தாச்சா என்று நக்கல் செய்ய....

அப்பா.... இவன் கிள்ளிக்கிட்டே இருக்கான்ப்பா. வலிக்குதுப்பா என்றேன் அழுது கொண்டே. ஒரு கணம் அமைதி

என்ன பேச்சு பேசுற.... என்று என்னை இழுத்து கன்னத்தில் ஒரு அடி வைத்தாள் அம்மா.

நிஜமாம்மா.... நெஞ்செல்லாம் வலிக்குதும்மா என்றேன் அழுது கொண்டே.

சேட்ட மட்டும் தான் பண்ணிட்டு இருக்கன்னு நினச்சா பொய் பேசவும் பழகிட்டியா என்று எனக்கு கூடுதலாக இரண்டடி கிடைத்தது.

Image Courtesy

இன்று :

இன்று :

அழுது கொண்டே உள்ளே வந்து படுத்து விட்டேன். அதற்கு பிறகு அங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாங்களும் ஊருக்கு வந்துவிட்டோம்.

என்னை யாரும் நம்பவில்லை என்ற ஏக்கமும்.... அன்பென்றாலே இப்படித்தான்... ஆண்கள் எல்லாரும் மோசம் அவர்கள் நம்மை எப்போதும் சீண்டுவதே வேலை என்று ஆண்கள் மீதான வெறுப்புடனும் வளர்ந்தது தான் மிச்சம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: love my story அன்பு
  English summary

  Girl shares her tragic first molested story

  Girl shares her tragic first molested story
  Story first published: Wednesday, January 3, 2018, 10:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more