Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு சமயோசிதமாய் சிந்தித்து உதவிய சக மாணவன் - ரியல் ஹீரோ!
மாதவிடாய் ஏற்பட்ட மாணவிக்கு சமயோசிதமாய் சிந்தித்து உதவிய சக மாணவன் - ரியல் ஹீரோ!
பெயர் மறைக்கப்பட்ட பெண் ஒருவர் குர்கான் மாம்ஸ் என்ற முகநூல் க்ரூப்பில் ஒரு இதயம் கனிந்த நன்றி கடிதத்தை எழுதி பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவின் ஸ்க்ரீன்ஷாட்கள் சமூக தங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாகவே பெண்களின் மாதவிடாய் என்பது நம் சமூகத்தில் ஒரு தீட்டு போல காணப்படுகிறது. எந்த மூன்று நாட்களில் அவர்களை பக்குவமாக பார்த்துக் கொள்ள வேண்டுமோ. அந்த நாட்களில் தான் அவர்களை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்து, தனி பாயில் படுக்க வைத்து அராஜகம் செய்கிறது நம் சமூகம்.

Image Source: The Asian Post
மேலும், பெண்களின் மாதவிடாய் குறித்து ஆண்கள் எள்ளளவும் அறிந்துக் கொள்ளாதபடி பேணிக் காக்கிறார்கள். இதனாலேயே பல ஆண்கள் பெண்களை பற்றி முழுவதுமாய் அறிந்துக் கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
ஒருவேளை பெண்களின் மாதவிடாய் வலி குறித்து அறிந்துக் கொண்டால், அவர்கள் மீது நல்ல மதிப்பு கூடும். அவர்களை கவர்ச்சி பொருளாக காணும் வன்மம், பார்வை குறையும். ஏன் கற்பழிப்பு குற்றங்கள் கூட குறையும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
சரி! இங்க குர்கான் அம்மா ஒருவர் தன் மகளுக்கு மாதவிடாய் நாளில் உதவிய ஒரு குட்டி ஹீரோ.. அல்ல, அல்ல... ரியல் ஹீரோ பற்றி என்ன கூறி இருக்கிறார். தன் சமயோசித புத்தியால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு அந்த ஹீரோ எப்படி உதவினான் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...

பள்ளிப் பேருந்து!
குறிப்பு: அந்த தாயே கூறுவது போல கட்டுரை மொழிபெயர்த்து எழுதப்பட்டுள்ளது...
என் மகள் அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு பள்ளி பேருந்தில்திரும்பிக் கொண்டிருந்த போது பீரியட்ஸ் ஏற்பட்டது.
இதை என் மகளை காட்டிலும் ஒரு வயது மூத்த மாணவன் ஒருவன், அவள் ஆடையில் ஏற்பட்டிருந்த இரத்த கறையை கண்டு மாதவிடாய் ஏற்பட்டதை அறிந்திருக்கிறான்.

காதருகே வந்து...
பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அந்த மாணவன், என் மகள் காதருகே வந்து. உன் ஆடையில் பின்னே இரத்த கறை ஏற்பட்டிருக்கிறது. நான் என் ஸ்வெட்டரை தருகிறேன். பேருந்தில் இருந்து இறங்கும் போது அதை உன் இடுப்பில் கட்டிக் கொண்டு வீட்டுக்கு பத்திரமாக செல் என்று கூறி இருக்கிறான்.

தர்மசங்கடம்!
முதலில் என் மகள் தர்மசங்கடமாக தான் உணர்ந்திருக்கிறார். ஆனால், அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பரவாயில்லை என்று அந்த மாணவனிடம் என் மகள் கூற, அவனோ பதிலுக்கு.., எனக்கு தங்கைகள் இருக்கிறார்கள். இதெல்லாம் பரவாயில்லை.. நீ என் ஸ்வெட்டரை எடுத்து செல் என்று மேலும் கூறி என் மகளை பத்திரமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டிருக்கிறான்.

நன்றி!
ஒருவேளை நீங்கள் அந்த மாணவனின் அம்மாவாக இருந்தால். உங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் மகனால் நல்லப்படியாக வளர்த்துள்ளீர்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் மிகவும் மோசமானவர்கள். கெட்ட வழியில் பயணிக்கிறார்கள் என்ற செய்திகளே அதிகம் காதுகளுக்கு வருகின்றன.
ஆனால், அவர்கள் நல்ல காரியங்களும் செய்கிறார்கள் என்பதை இந்த ஊரறிய வேண்டும் என்பதற்கே இந்த பதிவிடுகிறேன் என்று, அந்த தாய் தன் பதிவினை முடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பதிவின் கீழ், அந்த மாணவனின் செயலை பாராட்டி பலரும் தங்கள் கருத்தினை பதிவு செய்திருக்கிறார்கள்.

#1
என்னவொரு அற்புதமான குழந்தை இவன். பெண் உடலை குறித்து ஆண் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இதன் மூலம் அறிந்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அனைவரிடத்திலும் இரக்க குணம் பரவும்.

#2
உங்கள் மகள் மற்றும் அந்த மாணவனுக்கு 15 வயதாவது இருக்கும் என நம்புகிறேன். இந்த வயதில் அவளை கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் பிறக்கும்.
ஆனால், உங்கள் மகளிடம் நல்லப்படியாக நடந்துக் கொண்டிருக்கிறான். எனக்கு என்னவோ உங்கள் மகளுக்கு வாழ்நாள் நல்ல நண்பன் ஒருவன் கிடைத்திருக்கிறான் என்றே கருத தோன்றுகிறது.

#3
இவன் ஒரு ஹீரோ.

#4
இவனை போன்ற நிறைய நல்ல மக்கள் தான் இந்த உலகிற்கு தேவை. மற்றவருக்காக உதவ முன்வருவது இவனது நல்ல குணத்தை வெளிக்காட்டுகிறது.

#5
இப்படி தான் நாம் நமது மகன், மகன்களை வளர்க்க வேண்டும்.

#6
எனக்கு ஒருமுறை வகுப்பில் அமர்திருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டது. இதற்கும் நான் மகளிர் பள்ளியில் தான் பயின்று வந்தேன். மற்ற மாணவிகள் எல்லாம் வகுப்பறை விட்டு வெளியேறிய பிறகு என் தோழி வந்து எனக்கு உதவும் வரை காத்திருந்தேன்.

#7
நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாதவிடாய் முதல் முறை ஏற்பட்டது. என் வகுப்பு மாணவர்கள் எல்லாம் என்னை கண்டு சிரித்தனர். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை.

#8
இதே போன்ற சம்பவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அன்று என் ஹை ஸ்கூல் பார்ட்டி. இரண்டு வாரம் முன் கூட்டிய எதிர்பாராத நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டது. அன்று நான் வெள்ளி உடை அணிந்திருந்தேன். என் தோழன் ஒருவன் அவனது ஜாக்கெட்டை கொடுத்து உதவினான்.
மேலும், அவனது காதலியிடம் Tampon கேட்டு வாங்கிக் கொடுத்து உதவினான். நானும் அந்த நிகழ்வை மூன்று வருடத்திற்கு முன் பதிவிட்டிருந்தேன். நான் அவனுக்கு என்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன்.



Click it and Unblock the Notifications
