நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ரகசிய காதல் கதை இதுதானாம் - மலரும் நினைவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

சில பிரபலங்களின் காதல் கதை கிசுகிசுக்களில் ஆரம்பித்து புரளிகளில் வளர்ந்து ஊடகங்கள் வழியே மெல்ல, மெல்ல பரவி அவர்களாக சொல்லும் முன்னரே அவர்கள் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துக் கொள்வார்கள் என ஊருக்கே தெரிந்துவிடும்.

ஆனால், மிக சிலரின் காதல் கதை தான் ஊடகங்களுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில், இது நம்ம லிஸ்ட்லே இல்லையே என வியக்கும்படி இருக்கும். அந்த வகையில் இராத்திரி உறங்க செல்லும் மக்களை தட்டி எழுப்பிய காதல் திருமணம் தான் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் காதல் திருமணம்...

இந்த காதல் எப்படி பூத்து மலர்ந்து, பெற்றோர் சம்மதத்துடன் கை சேர்ந்தது என்ற மலரும் நினைவுகள் தான் இது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பள்ளி முதலே...

பள்ளி முதலே...

லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஸ்ரம் எனும் பள்ளியில் தனுஷ், தனுஷின் சகோதரி மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.

சகோதரி நட்பு!

சகோதரி நட்பு!

பள்ளியில் படிக்கும் போதிருந்தே தனுஷின் சகோதரி மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர். அப்போது தனுஷும் அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

சினிமா பயணம்!

சினிமா பயணம்!

பள்ளி படிப்புடன் தனுஷ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். அந்த பயணம் தனுஷை பிஸியாக்கியது. இந்த சினிமா பயணத்தின் நடுவே துள்ளுவதோ இளமை படத்தை பார்த்துவிட்டு ஐஸ்வர்யா தனுசுக்கு கால் செய்து பாராட்டியுள்ளார்.

புத்துயிர் பெற்ற நட்பு!

புத்துயிர் பெற்ற நட்பு!

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் வீட்டுக்கு வந்து அவரது சகோதரியுடன் நீண்ட நேரம் பேசுவாராம். அப்போது இவர்கள் இருவரும் அதிக நேரம் செலவழித்து பழகியுள்ளனர்.

பாராட்டு!

பாராட்டு!

தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, என வெற்றி படங்கள் கொடுத்து வந்த தனுஷை மிகவும் பாராட்டியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இது மெல்ல, மெல்ல நட்பில் இருந்து காதலாக மலர்ந்தது.

திருமணம்!

திருமணம்!

நீண்ட நாட்கள் பெற்றோரிடம் கூறாமல், மறைமுகமாக காதலித்து வந்தோம். ஒரு நாள் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து, காதலை இருவீட்டாரிடம் கூறி, சம்மதம் பெற்று திருமணம் செய்துக் கொண்டதாக தனுஷ் அவரது பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Secret Love Story of Actor Dhanush and Aiswarya R Dhanush!

The Secret Love Story of Actor Dhanush and Aiswarya R Dhanush!
Story first published: Tuesday, April 18, 2017, 14:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter