For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரோப்போஸ் செய்றதுக்கு முன்னாடி இதெல்லாம் யோசிச்சிருக்கீங்களா?

காதலைச் சொல்வதற்குள் காதலர்கள் ஏன் அவ்வளவு தூரம் தயங்குகிறார்கள் என்று விளக்கும் சிறுகதை.

|

ஐ லவ் யூ இதைச் சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. எவ்வளவு யோசனைகள். சொல்லப்போவதைக் காட்டில் அவள் என்ன நினைப்பாள் இதுவரை எங்கிளிடையே இருந்த நட்பு முறிந்திடுமா? மீண்டும் பழைய மாதிரியே என்னுடன் பேசுவாளா என்றெல்லாம் மின்னி மின்னி மறைந்திடும்.

Real story about a guy who hesitate to propose his girl.

என்னை தவறாக நினைத்துவிட்டாள்... ச்சை ஏன் நினைக்கணும் காதலிக்கிறது என்ன அவ்ளோ பெரிய தப்பா? தப்பில்லை தானே பின்ன ஏன் இவ்வளவு தயக்கம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிராகரிக்கவே முடியாது :

நிராகரிக்கவே முடியாது :

ஃபுட் பால் விளையாட்டில் தேசிய அளவில் பதக்கம் பெற்றிருக்கிறேன். செமஸ்டரிலும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கிறார்கள்.

ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் பயணிக்கிறேன். குற்றம் சொல்லும்படியாக எதுவும் இல்லைதானே பின்னர் என்ன என்னை நிகாரிக்கவே முடியாது.

சமாளிக்க முடியுமா :

சமாளிக்க முடியுமா :

அப்படியே நிராகரித்தால்? என்னென்ன காரணங்களை சொல்வாள் அவள், ஆர்வமில்லை, காதலில் நம்பிக்கையில்லை, சாதி, ஆண்களை நம்பவில்லை ,இன்னொரு காதலன், எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம். ஆனால் இந்த மூன்றாவது தான் கொஞ்சம் சிக்கலானது.

எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று எப்படி என்னால் சொல்ல முடிகிறது. எனக்கு அவள் மேல் உள்ள விருப்பத்தைப் போலவே அவளுக்கும் வேறு யார் மீதோ விருப்பம் இருக்கலாம்.

காத்திருக்க முடியுமா? :

காத்திருக்க முடியுமா? :

அதை எப்படி நீ மாற்றிக்கொள் உனக்கு என்னை தான் பிடிக்க வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாளை... நாளை மறு நாள் அல்லது ஒரு மாதம் கழித்து உனக்கு பிடிக்கவேண்டும். அதுவரை நான் காத்திருப்பேன் என்று சொல்வது எப்படி சரியாகும்.

நான் காதலிக்கிறேன் என்றால் அவளது விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? அப்படியே அவள் நிராகரித்தால் என்ன?? வாழ்க்கையில் தோல்வியையே நான் சந்தித்ததில்லையா என்ன இதோ நான் பெரிதும் நேசிக்கும் இந்த கால்பந்தாட்டத்தில் எத்தனை முறை தோற்றிருக்கிறேன்.

சரி இப்போ காதலைச் சொல்லலாமா வேண்டாமா? ஒரு முடிவையும் எடுக்கமுடியவில்லை அவனால்.

அவள் :

அவள் :

நல்ல தோழி. இன்னும் சொல்லப்போனால் பள்ளியிலிருந்தே ஆரம்பித்த எங்கள் நட்பு இன்று கல்லூரி வரை தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளாக நானும் நட்பாகத்தான் பார்த்தேன் பழகினேன். ஏனோ இந்த கடந்த பத்து நாட்களாகத்தன இப்படி.

என்னைப் போலவே அவளும் உணர்ந்திருப்பாளா?

சுயநலக்காரன் :

சுயநலக்காரன் :

என்ன ஆனாலும் சரி, சொல்லிப் பார்ப்போம் அவளின் ரியாக்‌ஷன்களைக் கொண்டு முடிவை மாற்றிச் சொல்லலாம். நட்பை தொடரலாம். வாட்சப்பில் அனுப்பலாம். என் காதலைச் சொல்ல, என் விருப்பத்தை சொல்ல நான் ஏன் இப்படி தயங்க வேண்டும்? நேரிலேயே சொல்லலாமே... இப்போதும் நான் என்னைப் பற்றி மட்டும் யோசிக்கிறேன்.

சுயநலமாய்....

காதலைச் சொல்ல சிறந்த ஐடியா :

காதலைச் சொல்ல சிறந்த ஐடியா :

அன்றைய இரவு தூக்கம் கொள்ளவில்லை. அறைக்கதவை மூடிக்கொண்டு புரண்டு புரண்டு படுக்கிறேன். இவ்வளவு புலம்பலுக்கு பிறகு என் காதலை நாளைக்குச் சொல்வதென முடிவெடுத்துவிட்டேன்.

ஆனால் எப்படி சொல்வது.

எந்த ஐடியாவும் சரியாகப் படவில்லை. ஒவ்வொன்றிலும் ஏதேனும் சிக்கல்கள் இருந்தது. வழக்கத்திற்கு மாறாக இன்றைக்கு சீக்கிரமே எழுந்துவிட்டேன். சரி, அவளுக்கு குட்மார்னிங் அனுப்புகிற சாக்கில் ஒரு ஐ லவ் யூ அனுப்பிவிடலாம். இல்லை எதாவது ஒரு குட்டிக் கவிதை அனுப்பலாம் என்று நினைத்தேன்.

காதல் கவிதை :

காதல் கவிதை :

கவிதைக்கு நான் எங்கே செல்ல? என்னை விட அவள் நன்றாக எழுதுவாள் பாவி, எனக்கு ஒரு காதல் கவிதையை அனுப்பினால் தான் என்ன பேசாம அவளிடமே ஒரு காதல் கவிதையை கேட்டு அவள் எனக்கு அனுப்பியதும் அதை அப்படியே அவளுக்கு ஃபார்வேர்ட் செய்தால்?

அவளுக்கு புரியுமா??

பெரும் போராட்டத்திற்கு பிறகு ஹேவ் எ நைஸ் டே லவ் யூ டியர் என்று ஒரு ஹார்ட் சிம்பளுடன் அனுப்பி வைத்தேன்.நீண்ட நேரமாக அவள் ஆன்லைன் வரவேயில்லை.

என் காதலுக்கான பதில் :

என் காதலுக்கான பதில் :

ஒன்பது மணி கல்லூரிக்கு எட்டுமணியாகியுமா எழுந்தரிக்காமல் இருப்பாள். இருக்காதே.... வீட்டில் வேறு யாராவது பார்த்துவிட்டாள். அத்தனை பேருக்கும் என்னைத் தெரியும். அதிலும் அவளின் தம்பி இருக்கிறானே ராட்சன். அடிவயிற்றையே கலக்கியது.

ஆமா இல்ல எதாவது ஒண்ணு சொல்லித்தொலையேண்டீ ... என்று போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒன்பதரை மணிக்கு மெசேஜ். நாக்கை துறித்திக் கொண்டு கிண்டலடிக்கும் ஸ்மைலியுடன் என்னடா நைட்டு செம்ம போதையா?

பாவி... லவ் யூ என்றாலே போதையில் தான் சொல்வோமா என்று மனதில் நினைத்துக் கொண்டு காலேஜ் வர்லையா என்று அனுப்பினேன்.

அதான் ஹேவ் எ நைஸ் டேன்னு சொன்னல்ல... அதனால காலேஜ் வர்ல நல்லா தூங்கப்போறேன் என்றாள்.

அடக் கொடுமையே...

காதலுக்கு நண்பர்கள் உதவி :

காதலுக்கு நண்பர்கள் உதவி :

நண்பர்கள் மூலமாக சொல்லலாமா என்று யோசித்து நம்முடைய வானரைப்படைகளின் அலும்பலை நினைத்து அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.

அதற்கு பிறகு பல சந்தர்ப்பங்களில் என் காதலை சொல்ல நினைத்தேன் ஆனால் ஏதோ ஒரு தயக்கம் என்னை சொல்லவிடாமல் தடுத்தது.

காலையில் தனித்தனியாக வந்தாலும் மாலையில் சேர்ந்தே தான் வீட்டிற்கு திரும்புவோம். என்னை என் வீட்டில் இறக்கிவிட்டு அவள் செல்வாள். மாலை கிரவுண்டில் நான் பிராக்டிஸ் செய்யும் வரை லைப்ரேரியில் காத்திருப்பாள் சில சமயம் ஸ்டோன் பென்ச்சில் உட்கார்ந்து நாங்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பாள்.

சரியான சந்தர்ப்பம் :

சரியான சந்தர்ப்பம் :

அன்று தனியாக நாங்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து ப்ராக்டிஸை பாதியிலேயே விட்டுவிட்டு வந்தேன்.

மெல்ல உரையாடலை ஆரம்பித்து, பைக் பார்க்கிங் இருக்கும் இடம் வரை அமைதியாக நடந்து சென்றோம். அந்நேரத்திலும் சொல்லலாமா? வேண்டாமா என்ற யோசனை தான் இருந்தது.

எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா? என்று கேட்டுவிட்டேன். அமைதியாக எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தவள்,

நான் சொன்னதும் அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள். விழுந்து விழுந்து சிரிதாள். அப்படி என்ன காமெடி சொல்லிவிட்டேன் என்று தெரியவில்லை.

கோபத்துடன் சீரியஸா கேக்குறேன் என்று சொல்ல , மொக்க போடாதடா என்று சொல்லிவிட்டு முன்னால் வேகமாக நடந்து சென்றாள்.

சரி அவளுக்கு விருப்பமில்லை போல என்று நினைத்துக் கொண்டேன். இனிமேல் அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்து என் காதலை சொல்வதையே விட்டுவிட்டேன்.

மிஸ் யூ :

மிஸ் யூ :

இறுதியாண்டு படிக்கும் போதே அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்தார்கள். எனக்கு பூனேவில் வேலை.அன்று இரவு பூனேவிற்கு கிளம்ப வேண்டும். கடைசியாக அவளை பார்கக் வேண்டும். அதற்கு பிறகு திருமணமாகிவிட்டால் பழைய மாதிரி சந்திக்க பேசிக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை

மதிய உணவிற்கு வெளியே ஹோட்டலுக்குச் சென்றோம். பழைய கதைகளை எல்லாம் பேசிவிட்டு. அன்றைக்கு என் காதலை சொன்னபோது ஏன் சிரித்தாய் என்று கேட்டேன்.

அவள் ஏதாவது பதிலைச் சொல்லியிருந்தாலவது சரி இதற்காகத்தான் என் காதலை ஏற்கவில்லை என்று புரிந்திருக்கும் இப்படி விழுந்து விழுந்து சிரித்தால் நான் எப்படி எடுத்துக் கொள்வது என்று அன்றைக்கு நான் வருந்தியதை அவளிடம் சொன்னேன்.

பதிலேதும் சொல்லவில்லை.

சாப்பிட்டு முடித்து கிளம்பும் போது, வெளிய வேலை இருக்கு நான் அத முடிச்சுட்டு வீட்டுக்கு வர்றேன் என்று சொல்லிவிட்டு ஆட்டோ ஏறினாள். கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.

ஆட்டோ நகர்ந்ததும் என் மொபைலுக்கு ஒரு மெசேஜ். அவளே தான்.

மிஸ் யூ. என்றிருந்தது

காதல் வாழும் :

காதல் வாழும் :

அடியேய்... இதுக்கு என்னடி அர்த்தம். மொட்டையா மிஸ் யூன்னு அனுப்பியிருக்க என்று கேட்க நினைத்தேன் ஆனால் கேட்கவில்லை ஒரு ஸ்மைலியை சேர்த்து மிஸ் யூ டூ என்று அனுப்பினேன்.

எனக்கு உன்னைய புடிக்கும். என்ன இவ்ளோ டீப்பா லவ் பண்ணனு எனக்கு தெரியாது. அத நீ எனக்கு சொல்லவேயில்ல நானும் உன்கிட்ட காமிச்சுக்கிட்டதில்ல எனக்கு நம்ம பிரண்ட்ஷிப் பெருசா தெரிஞ்சது. நம்ம ரெண்டு பேருமே நம்ம மனசுல இருக்குற லவ்வ வெளிப்படுத்த முயற்சியே எடுக்கல...

என்ற அர்த்தத்தில் நீண்ட மெசேஜை அனுப்பியிருந்தாள்.

என்னத்தச் சொல்ல...பைக்கை எடுத்துக் கொண்டு அவளிடம் விரைந்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real story about a guy who hesitate to propose his girl.

Real story about a guy who hesitate to propose his girl.
Story first published: Wednesday, September 6, 2017, 14:08 [IST]
Desktop Bottom Promotion