மகளிர் மட்டும் தோசா சேலஞ் ஏற்று தோசை சுட்ட பிரபலங்கள்! #MMDosaChallenge

Posted By:
Subscribe to Boldsky

திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் அவர்களது துறையில் சாதிப்பது சற்றே கடினமான விஷயம் தான். அதிலும் குழந்தை பிறகு கூடுதல் பிரஷர். குடும்பம், குழந்தை, வேலை என அனைத்தையும் கவனிக்க இரண்டு கைகள் போதாது. கோலிவுட்தில் செகண்ட் இன்னிங்ஸ்-ஐ வெற்றிகரமாக துவக்கி இருக்கும் ஒரே நடிகை ஜோ தான்.

அவரது அடுத்த படம் மகளிர் மட்டும். இதன் ப்ரோமொஷனாக மாறியுள்ளது #MMDosaChallenge. இந்த சேலஞ்சை ஏற்று சில பிரபலங்களும் தோசை சுட்டு வருகின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு!

கலாட்டா டைரக்டர் வெங்கட் பிரபு சுட்ட தோசை!

மனைவிகளின் கணவருக்கான குறிப்பு: எண்ணெய் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். எண்ணெய் பொருள் சமைக்கும் போது ஈரமான கையோட செல்ல வேண்டாம்.

ஜெய்!

ஜெய்!

எல்லாரும் மனைவிக்கு தோசை சுட்டுக் கொடுக்க ஜெய் தனது காதலிக்கு சுட்டு கொடுத்துள்ளார்.

மனைவிகளின் கணவருக்கான குறிப்பு: சமைத்த பிறகு அடுப்படியை சுத்தமா வெச்சுக்கணும்!

சூர்யா - ஜோ!

சூர்யா - ஜோ!

தான் தயாரித்து மனைவி நடிக்க வெளியாகவிருக்கும் மகளிர் மட்டும் ப்ரோமோஷன் சேலஞ்சாக நெட்டில் உலா வந்துக் கொண்டிருக்கிறது #MMDosaChallenge. இதில் சூர்யாவும் பங்கெடுத்து ஜோவுக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்.

மனைவிகளின் கணவருக்கான குறிப்பு: ஒரு நாள் மட்டும் தோசை ஊத்துனா போதாது, ஆண்கள் சமையலை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜிப்ரான்!

ஜிப்ரான்!

இசை அமைப்பாளர் ஜிப்ரான்!

மனைவிகளின் கணவருக்கான குறிப்பு: கேஸ் ஆப் செய்ய மறக்க கூடாது.

விஜய்!

விஜய்!

மகளிர் மட்டும் படத்தின் இந்த சேலஞ் சூடுபறக்க டிரென்ட் ஆவதை கண்டு, ட்விட்டரில் விஜயின் ரசிக மக்கம் விஜய் தோசை சுடும் பழைய போட்டோவை டிரென்ட் செய்து வருகின்றனர்.

மனைவிகளின் கணவருக்கான குறிப்பு: குக்கரை அதிக பிரஷரில் திறக்க கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Magali Mattum Dosa Challenge Celebrities who made Dosa #MMDosaChallenge

Magali Mattum Dosa Challenge Celebrities who made Dosa #MMDosaChallenge
Please Wait while comments are loading...
Subscribe Newsletter