Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
22 வருடங்களாக நாயின் உதவியுடன் சாக்கடையில் வாழ்ந்து வரும் முதிய தம்பதி!
எல்லாரையும் போன்ற வாழ்க்கை தான் இந்த தம்பதியும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சாக்கடையில் என்பது தான் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
நமது உலகில் இரண்டு வகையான மக்கள் இருக்கின்றன. எத்தனை இருந்தாலும் போதவில்லை என்ற மனம் கொண்டவர்கள், இருப்பதை வைத்து நிறைவடையும் மக்கள். இதில் இந்த கொலாம்பியன் தம்பதி இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள்.
இந்த உலகம் எதை எல்லாம் வசதி என்கிறதோ அதில் துளியும் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்துக் கொண்டிருக்கார்கள் இவர்கள்...

மரியா கார்சியா, மிகுவல் ரெஸ்ட்ரேபோ!
மரியா கார்சியா மற்றும் அவரது கணவர் மிகுவல் ரெஸ்ட்ரேபோ கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

மேடெல்ளின்!
கொலம்பியாவின் மேடெல்ளின் எனும் பகுதியில் தான் இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது இருவரும் போதை பழக்கதிற்கு அடிமையாக இருந்தனர்.

போதை பழக்கம்!
மேடெல்ளின் போதை பொருள் விற்பனையின் படுபயங்கரமான பகுதியாகும். மரியா கார்சியா, மிகுவல் ரெஸ்ட்ரேபோவின் வாழ்க்கை இதில் சிக்கி சின்னாபின்னமாகி போனது.

ஆறுதல்!
ஆழ்ந்த துயரத்தில் இருந்த அந்த தருணத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக விளங்கினர். போதை பழக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக வெளிவந்தனர்.

உதவிக்கு யாரும் இல்லை!
போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்த பிறகும், இவர்களுக்கு உதவுவதற்கு என நண்பர்களோ, குடும்பமோ இல்லை. அப்போது தான் சாக்கடையில் வாழ துவங்கினர்.

தொல்லைகள்!
துவக்கத்தில் இவர்களுக்கு நிறைய தொல்லைகள் வந்தனவாம். அனைத்தையும் தாண்டி தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர் மரியா கார்சியா, மிகுவல் ரெஸ்ட்ரேபோ.

நிறைந்த வாழ்க்கை!
தொடர்ந்து 22 வருடங்களாக சாக்கடையில் வாழ்ந்து வரும் இவர்கள் இருவருக்கும் இதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. தங்களுக்கு கிடைப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

வீடு!
சாக்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின்வசதி, சமையல் அரை, விளக்குகள் அமைத்து இவர்கள் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். மற்றவரை போல இவர்களும் கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களை கொண்டாடுகின்றனர்.

நாய்!
இந்த தம்பதி பிளாக்கி எனும் நாயை வளர்த்து வருகின்றனர். இது தான் இவர்களுடைய காவலன். இவர்கள் இல்லாத நேரத்தில் வீட்டை காப்பதும் இதுதான்.



Click it and Unblock the Notifications
