தாத்தா, பாட்டிங்கிறவங்க வெறும் உறவு மட்டும் இல்ல, அதுக்கும் மேல...!!!

Posted By:
Subscribe to Boldsky

தாத்தா, பாட்டி... இப்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் ஓர் பொக்கிஷமான உறவு. பாசம், பரிவு, அக்கறை, கலாச்சாரம், ஆரோக்கியம், வாழ்வியல் முறை என்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செயல்முறையில் கற்பிக்கும் பல்கலைகழகங்கள் தான் தாத்தா, பாட்டி.

கல்யாணம் எல்லாம் பழைய பஞ்சாங்கம் - ஓ காதல் கண்மணி எஃபெக்ட்டு!!!

தற்போது அதிகரித்து வரும் காலாச்சார சீர்கேட்டிற்கு, பாட்டி தாத்தா உறவை பிரிந்து இருப்பது ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தை கற்றுத்தர அல்லது எடுத்துரைக்க இன்றைய பெற்றோருக்கு நேரம் இல்லை என்பதைவிட, முற்றிலும் மறந்துவிட்டனர் என்பது தான் உண்மை.

ஒரு உறவில் ஈடுபடும் போது நீங்கள் கற்றுக் கொள்ளும் அருமையான விஷயங்கள்!!!

இனி, தாத்தா, பாட்டி உறவில் இருந்து அடுத்த சந்ததியினருக்கு கிடைக்கும் பொக்கிஷமான விஷயங்கள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்துப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாசம்

பாசம்

தாய் தந்தையிடம் கிடைக்கும் பாசத்திற்கும், தாத்தா பாட்டியிடம் இருந்து கிடைக்கும் பாசத்திற்கும் வேறுபாடு உண்டு. இதில், அக்கறை, பரிவு, கொஞ்சுதல் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

வாழ்வியல் முறை

வாழ்வியல் முறை

நாம் எப்படி வாழ வேண்டும், எந்தெந்த தருணங்களை எவ்வாறு கையாள வேண்டும். மகிழ்ச்சி, இகழ்ச்சி, இன்பம், துன்பம் போன்றவற்றை கடந்து வருவது எப்படி போன்ற வாழ்வியல் முறைகளை தாத்தா பாட்டியிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள முடியும்.

நாகரீகம்

நாகரீகம்

தாத்தா பாட்டியிடம் இருந்து மிக முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நாகரீகம். ஒவ்வொருவரிடத்திலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும். பண்பு, குணம் போன்றவற்றை நல்ல முறையில் எடுத்துரைப்பவர்கள் தாத்தா பாட்டி தான்.

கலாச்சாரம்

கலாச்சாரம்

தாத்தா, பாட்டியை விட்டு பிரிந்து வாழும் முறை வந்ததற்கு பின்பு தான் மேற்கத்திய கலாச்சாரம் நமது நாட்டில் நன்கு காலூன்ற ஆரம்பித்தது. நமது கலாச்சாரத்தை முழமையாக தெரிந்துக் கொள்ள ஒரே ஆதாரம் தாத்தா, பாட்டி தான்.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

உணவை வெறுமென சமைக்காது ஆரோக்கிய நலன் மற்றும் கால நிலை மாற்றம் அறிந்து சமைக்க தெரிந்தவர்கள் பாட்டி, தாத்தா. தாத்தா பாட்டி என்ற உறவுகள் நமது வீட்டில் இருந்த வரை நோய்களின் எண்ணிக்கையும், மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் இவ்வளவு பெரிதாக இல்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை.

சிறுகதைகள்

சிறுகதைகள்

நாகரீகம், பண்பு, குணம், நல்லது, கெட்டது என அனைத்தையும் எடுத்துரைக்கும் நல்ல நல்ல சிறுகதைகள் பெரும்பாலும் பாட்டியால் கூறப்படுவது தான். வார இறுதியில், கோடை விடுமுறையில் அவர்களிடம் கேட்டு மகிழ்ந்த சிறுகதைகள் ஏராளம். அது, இந்த தலைமுறையினருக்கு அவ்வளவாக கிடைக்கவில்லை.

பரம்பரை விஷயங்கள்

பரம்பரை விஷயங்கள்

நாட்டின் வரலாறை விடவும் முக்கியமானது சுய வரலாறை தெரிந்துக்கொள்ள வேண்டியது. தாத்தா, பாட்டன் அவர்களது பெற்றோர், வாழ்ந்து வந்த முறை, பரம்பரை வழக்கங்கள் என நாம் பரம்பரை பற்றி கற்றுக்கொள்ள தாத்தா, பாட்டி உறவு மிகவும் முக்கியம்.

அப்பா, அம்மா லூட்டி

அப்பா, அம்மா லூட்டி

நம்மை திட்டி தீர்க்கும் அப்பா அம்மாக்களின், சிறுவயது குறும்புகளை கூறி நம்மை மகிழ்விக்கும் உறவு தாத்தா பாட்டி உறவு. "நீ மட்டும் சின்ன வயசுல என்னத்த கிழிச்ச..." என்று மகனை முறைத்துக் கொண்டு பேரனை கட்டி மகிழும் பாட்டியின் உறவு உண்மையிலேயே நெகிழ்ச்சியான உறவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Reasons Why Grand Parent Relationships Are More Heartfelt

Do you know why grand parents relationships are more heartfelt? read here.
Story first published: Monday, May 4, 2015, 13:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter