For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள், ஆண்களிடம் கேட்க தயங்கும் விஷயங்கள்!!!

இறுக்க அனைத்து "உம்ம்ம்மா.." வைத்துக் கொள்ளும் அளவு நெருக்கமாக பழகினாலும் கூட, காதலிக்கும் பெண்கள் அவர்களது ஆண்களிடம் சில விஷயங்களைக் கேட்க தயங்குகின்றனர்.

By John
|

இறுக்க அனைத்து "உம்ம்ம்மா.." வைத்துக் கொள்ளும் அளவு நெருக்கமாக பழகினாலும் கூட, காதலிக்கும் பெண்கள் அவர்களது ஆண்களிடம் சில விஷயங்களைக் கேட்க தயங்குகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் பயப்படுகின்றனர்.

இன்பமாக இருக்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!!!

திருமணத்தைப் பற்றிய பேச்சுகளுக்குக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள் (நடக்குறதா இருந்தா தானே பயப்படனும்....) ஆனால், ஒரு சில விஷயங்களை ஆண்களிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர் காதலிகள்!!!

ஆண்களை குஷிப்படுத்தும் "இல்லற" விஷயங்கள்!!

அது என்ன விஷயங்கள், அந்த விஷயங்கள் என்ன அவ்வளவு பயங்கரமானவையா..? (சில விஷயங்கள் தூக்கிவாரிப் போடும்படியாக தான் இருக்கின்றது....)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மாவை பிரிந்து இருப்பது

அம்மாவை பிரிந்து இருப்பது

காதலிக்கும் பெண்கள், "நீ அம்மாவ பிரிஞ்சு இருப்பியா..." என்று கேட்பதே, திருமணத்திற்கு பிறகு நாம் தனிக் குடித்தனம் போக சம்மதிப்பாயா என்ற கேளிவிக்கான அடித்தளம் தான். ஆனால், இதைக் கேட்டவுடன் ஆண்கள் எந்த அளவு கோவப்படுவார்கள் என்று தெரியாததால், இதைப் பற்றி ஆண்களிடம் கேட்க பெண்கள் தயங்குகின்றனர்.

ஆசை, கனவுகள்

ஆசை, கனவுகள்

புராண காலங்களில் இருந்தே, காதலிக்கும் ஆண்களின் ஆசையையும், கனவுகளையும் குழித்தோண்டி புதைக்கும் வெட்டியான் வேலையை செய்வதை பழக்கமாக வைத்திருக்கின்றனர் பெண்கள். இது பல காதல்களுக்கு "டாட்டா.." சொல்ல வைத்திருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.

நண்பர்களின் சகவாசம்

நண்பர்களின் சகவாசம்

காதலிக்க தொடங்கியதுடன், தம்மு, குடியுடன் சேர்ந்து காதலிகள் நிறுத்த சொல்லும் மற்றுமொரு விஷயம்," அந்த பொறுக்கி பசங்கக் கூட உனக்கெதுக்கு சகவாசம்...". ஒன்று கிடைத்தவுடன், மற்றொன்றை மறக்கும் அவர்களது குணத்தை ஆண்களுக்கும் பழக்க காதலிகள் எடுக்கும் கொடிய முயற்சி இது. ஆனால், கேட்கும் முன்னர் "செமையா பயப்படுவாங்க...."

முன் அனுபவம்

முன் அனுபவம்

காதலிக்க ஆரம்பித்த பிறகும் கூட, "ஒரு வேளை அவன் நம்மகிட்ட பொய் சொல்லிருப்பானோ, ஏற்கனவே யாரையாவது காதலிச்சிருப்பானோ" என்ற எண்ண அலைகள் பெண்களுக்குள் அடித்துக் கொண்டே தான் இருக்கும் ஆனால், கேட்கமாட்டார்கள். (ஏன்னா.. பயம், பசங்க எங்க கழட்டி விற்றுவாங்கலோ'ன்ற பயம்..)

மாற்றம் கொண்டுவர...

மாற்றம் கொண்டுவர...

அனைத்து பெண்களுமே அவரவர் காதலர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும், கெத்தாக தெரிய வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், இதை மாற்று, அதை மாற்று என்று கூறினால் எங்கு சண்டை வருமோ என்று பெண்கள் இதைப் பற்றி எதுவும் கேட்பதில்லையாம். (இதெல்லா நம்புற மாதிரி இல்லையே, காதலிச்சதுக்கு அப்பறம் மொத்தமா அவங்க வெச்ச தலையாட்டி பொம்மையா தான பசங்கள பாக்குறாங்க)

மன்னிப்பு கேட்க

மன்னிப்பு கேட்க

இது பாயின்ட்டு..... பெண்கள் தாங்கள் செய்தது தவறு தான் என்றாலும், ஆண்களிடம் மன்னிப்பு கேட்க தயங்குவார்கள்.தெரியாமல் யாருடைய காலை மிதித்துவிட்டால் கூட அரைநொடியில் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். ஆனால், நீ தான் என் வாழ்க்கை என்று சொல்லும் அந்த வாய், அவனிடம் மன்னிப்பு மட்டும் கேட்காது. (கெத்து பிரச்சனை...)

அனைத்தையும் உளறுவது

அனைத்தையும் உளறுவது

பெண்கள் இரண்டு துருவங்களை போல, ரகசியங்களை பாதுகாக்கவும் செய்வார்கள், அதே சமயம் மிக எளிதாக ஓட்டை வாய் மொத்தத்தையும் உளறிக் கொட்டிவிடும். இதேப் போல ஆண்களும் உளற வேண்டும் என்று எதிர்பார்பார்கள். (நாம ஃபுல் போதையில இருந்தாலே பண்ணுக கிட்ட உளற மாட்டோமே....)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Things Women Get Afraid To Ask Men

Do you know about the ten things women get afraid to ask men? read here.
Desktop Bottom Promotion