Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
தனிமை ஓர் சிறந்த ஆசான் என்பதற்கான காரணங்கள் - வாழ்க்கை பாடம்!
தனிமை என்பது கொடுமை என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால், உண்மையில் தனிமை ஓர் சிறந்த ஆசான். வாழ்க்கையை பற்றிய சரியான, உண்மையான பாடங்களை கற்றுக் கொடுப்பதே தனிமை தான். தனிமை ஓர் சிறந்த நண்பன். உங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் யார், உங்களிடம் நேர்மையாக நடந்துக் கொள்பவர்கள் யார் என்பதை தனிமை தான் உணர்த்துகிறது.
உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது தனிமை. நீங்கள் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி கவனச் சிதறல்கள் இன்றி உழைக்க தனிமை ஊக்கம் அளிக்கிறது. உண்மையில் தனிமை என்பது இழப்பு அல்ல, உங்கள் வாழ்க்கையை நீங்கள் புத்துணர்ச்சியுடன் துவக்க ஓர் நல்ல வழி தான் தனிமை...

நீங்கள் தான் சிறந்த நண்பர்
நீங்கள் தனிமையில் இருக்கும் போது அல்லது தனிமையில் தள்ளப்பட்டிருக்கும் சூழலில் தான் நீங்கள் தான் உங்களது சிறந்த நண்பர் என்பதை உணர முடியும்.

கையாள முடியும்
தனிமையான சூழல் தான் உங்களுக்கு எதையும் கையாள முடியும், கையாள முடியாத நிலை என்று எதுவும் இல்லை என்று கற்றுக் கொடுக்கிறது.

உணர்வுகளை கட்டுப்படுத்துதல்
இந்த சூழலில் தான் உங்கள் உணர்வுகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.

மகிழ்ச்சி பிறரை சார்ந்தது அல்ல
உங்கள் மகிழ்ச்சி பிறரை சார்ந்தது அல்ல என்பதை நீங்கள் உணரும் தருவாய் தனிமை. மற்றும் உங்கள் மகிழ்ச்சி மற்றவரது கைகளில் இல்லை என்பதையும் தனிமை உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.

முடிவெடுக்க கற்றுக் கொள்ளுங்கள்
யாரிடமும் நீங்கள் ஒப்புதல் வாங்க தேவையில்லை. இது உங்கள் வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை சிறக்க நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதை தனிமை மட்டுமே கற்றுக் கொடுக்கும்.

உற்பத்தி திறன் அதிகரிக்கும்
தனிமையில் இருந்து மீண்டு வருபவர்களிடம் உற்பத்தி திறன் அதிகரிக்கும். ஏனெனில், அவர்களது கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும். கவன சிதறல்கள் குறைந்திருக்கும்.

நீங்களே செய்ய முடியும்
நீங்கள் விரும்பும் செயல்களை மற்றவர்களின் துணை அல்லது உதவி இன்றி நீங்களே செய்து முடிக்க முடியும் என்ற ஊக்கத்தை தனிமை தான் அளிக்கிறது.

அமைதியும், பொறுமையும்
தனிமை உங்களுக்கு அளிக்கும் மிகச்சிறந்த இரண்டு பரிசு, அமைதியும், பொறுமையும். இவை இரண்டும் உங்களை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை அடைய உதவும்.

தேர்ந்தெடுங்கள்
உங்களுக்கான தேவை என்ன? அதற்கு நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். உங்களுக்கு பசிக்கும் போது என்ன சாப்பிட வேண்டும் என்று நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.

உறவுகளை இணைக்கும்
உண்மையான உறவுகளை இணைக்கும் பாலம் தான் தனிமை. இது, உங்கள் பெற்றோர், நண்பர்கள் மத்தியில் ஒன்றிணைந்து செயல்பட உதவுகிறது.



Click it and Unblock the Notifications