மன அழுத்தத்தைத் தடுக்கும் தாத்தா-பாட்டியின் அரவணைப்பு!!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறிய குடும்பங்களாகிவிட்டதால் தாத்தா பாட்டிகளோடு, பேரக் குழந்தைகள் கொஞ்சி மகிழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. மேலும் இன்றைய தலைமுறையினர் வயதானவர்களை தங்களுடன் வைத்து கொள்ள விரும்புவதில்லை.

அதே சமயம் நமக்கும் அந்த நிலை வரும் என்பதை இவர்கள் உணர்வதில்லை. வேலைக்கு செல்லும் கணவன் மனைவி, வீட்டில் இருக்கும் பெரியவர்களை தொல்லை என்று கருதி அவர்களை விட்டு பிரிந்து தனிக்குடித்தனம் நடத்துகின்றனர்.

Grandparents Helping Grandchildren In Times of Stress

சிலரோ அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுகின்றனர். இதனால் பேரன், பேத்திக்கு அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் போய்விடுகிறது. தனியாக ஓரிடத்தில் வயதான காலத்தில் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தாத்தா, பாட்டிகளும், பள்ளி, பள்ளி முடிந்து டியூஷன், இதர பயிற்சிகள் என பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் பேரன், பேத்திகளும் ஒரே இடத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, கொஞ்சி மகிழ்ந்து, விளையாடி, கதைகளைச் சொல்லி, அதனைக் கேட்டு வாழ்ந்து வந்தால், இரு தலை முறையினருக்குமே மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

தாத்தா மற்றும் பாட்டிகளோடு, அவர்களது பேரன் பேத்திகள் நன்கு விளையாடி மகிழ்ந்தால், இருவருக்குமே மன அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் நமக்கெங்கு நேரம் என்றில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களை சந்திக்க வழி ஏற்படுத்தி, இரு தலைமுறைக்கும் இடையே பெற்றோர் ஒரு பாலமாக இருந்தால், உங்கள் மூத்த தலைமுறையும், எதிர்கால தலைமுறையும் ஆரோக்கியமாக இருக்கும்.

English summary

Grandparents Helping Grandchildren In Times of Stress

Stress is part of life. Many children experience stress as a result of common changes, such as starting school or day care, change of parent's employment, moving to a new location, or death in the family. Grandparents can be effective role models of how to cope with stress for their grandchildren.
Story first published: Wednesday, October 29, 2014, 17:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter