Latest Updates
-
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா? -
பீட்ரூட் தோசையும், புதினா சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்..
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை ஆதரிக்க சில வழிகள்!!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளிடம் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். ஆனால், பிள்ளைகளாகிய நாம் பெற்றோர்களுக்கு வயதானவுடன் அவர்களை எதிரிகளாகவே பார்க்கின்றோம். நமது சிறுவயதில் நமக்காக நம் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கின்றனர் என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர வேண்டும். பெற்றோர்களுக்கு வயதாகும்போது அவர்களுக்கு நமது அன்பையும் ஆதரவையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
அல்சைமர் என்பது மனநோயில் ஒரு வகை நோயாகும். மூளை குறைபாடு ஏற்படுத்தும் இந்த நோய்க்கு இந்நாள் வரை தீர்வு ஒன்றும் கிடையாது. வயது மற்றும் மன அழுத்தம் இவை இரண்டும் தான் அல்சைமர் நோயின் முதல் அறிகுறிகளாகும். ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், பேசுவதில் கடினம் ஏற்படுவது போன்றவை மற்ற அறிகுறிகளாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோர்களுக்கு கடினமான காலமாகவே இருக்கும்.
பெற்றோர்கள் மற்றுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் பல மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்நாட்களில் பெரும்பாலானோர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதான பெற்றோர்கள் பெரும் அளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெற்றோர்களை பார்த்துக் கொள்வது பிள்ளைகளுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. அவர்கள் தன் சொந்த வாழ்வில் உள்ள பொறுப்புகளோடு இவர்களையும் சமாளிக்க வேண்டும்.
எல்லா பிள்ளைகளுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் போது பெற்றோர்கள் உடனிருப்பார்கள். அதனால், இப்பொழுது அவர்கள் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது அவர்களை ஆதரிப்பது ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும். உங்களின் குடும்ப சூழ்நிலைகளாலும், வேலை காரணமாகவும், அல்சைமர் நோயின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் சில சந்தர்ப்பங்களில் உங்கள் பெற்றோரை நர்ஸ்களின் ஆதரவில் விட நேரிடும். அப்படி நேர்ந்தாலும், அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க நீங்கள் அவர்களோடு இருக்க வேண்டும்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை பராமரிக்க எந்த டிப்ஸூம் தேவை இல்லை. ஆனால், இவை அனைத்தும் அவர்களின் சந்தர்ப்பங்களை நீங்கள் புரிந்து கொள்ள உதவி புரியும்.

அன்பு
நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்களுக்கு இந்த அன்பு அதிகம் தேவைப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் உங்கள் பெற்றோர்கள் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அளித்திருப்பார்கள். இதனை கவனத்தில் கொண்டு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சுமையாக பார்க்காமல் உங்கள் அன்பின் மூலமாக ஆதரிக்க வேண்டும். உங்கள் அன்பு மட்டுமே அவர்களை அமைதிப்படுத்தி கடினமான நேரங்களில் சந்தோஷத்தை அளிக்கும்.

பொறுமை
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை ஆதரிக்க உங்களுக்கு வேண்டியது பொறுமை மட்டுமே. பொறுமை மிகவும் அவசியமான ஒன்றாகும். சில நேரங்களில் அவர்களிடம் நீங்கள் கோபம் கொள்ள நேரிடும். அவர்களின் ஞாபக மறதி மற்றும் குழந்தைத்தனமான காரியங்கள் உங்களுக்கு எரிச்சலூட்டச் செய்யும். ஆனால், அவர்களிடம் அதை காண்பிக்ககூடாது. சில நேரங்களில் அவர்களுக்கு உங்களை அடையாளம் தெரியாமல் போகக்கூட நேரிடும். அதனால், நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து உங்கள் அன்பாலும் ஆதரவாலும் அவர்களை கையாள வேண்டும்.

வலிமையான இதயம்
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்துக்கொள்ளுவது என்பது எளிதான காரியம் அல்ல. சில கடினமான நேரங்களில் அவர்களுக்கு கோபம் ஏற்படக்கூடும், மனநிலைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும், உங்கள் பற்றி எதுவுமே ஞாபகத்தில் இல்லாமல் போய்விடக்கூடும். மேலும் சில நேரங்களில் முரட்டுத்தனமான நடந்துகொள்ள நேரிடும். இந்த சந்தர்ப்பங்களை சந்திக்க உங்களுக்கு வலிமையான இதயமும் எதார்த்தமான மனமும் வேண்டும்.உங்கள் பெற்றோரை இந்த நிலையில் பார்ப்பதற்கு மிகவும் கடினமாகத் தானிருக்கும். ஆனால், இந்த வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

அவர்களோடு இருக்க வேண்டும்
உங்கள் பெற்றோர்களை பார்த்து கொள்ள நர்ஸ் இருந்தாலும் நீங்கள் உங்கள் பெற்றோருடன் இருக்கும் தருணங்களை தவற விடக்கூடாது. அவர்களை சென்று பார்ப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் ஞாபகங்களுக்கு நீங்கள் மட்டும் தான் சொத்து. நீங்கள் அவர்களோடு இருக்கவிட்டால் உங்கள் பற்றிய ஞாபகங்கள் நாளடைவில் மறந்து போய்விடும்.

சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்
நீங்கள் எப்பொழும் போல அவர்களோடு பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் உங்கள் மறந்து போய்விட்டாலும் நீங்கள் அவர்களை பார்த்து புன்னகை செய்ய வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான பூக்கள் மற்றும் சாக்லேட்கள் போன்றவற்றை வாங்கித் தர வேண்டும். அவர்களை சந்தோஷமாக வைப்பதன் மூலமாக மீதி இருக்கும் சில வருடங்களில் சந்தோஷமாக இருக்கச் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications