Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
35 வயது ஆகியும் இன்னும் திருமணமாகாம இருக்கீங்களா? அப்ப இதெல்லாம் நடக்கலாம் பாத்துக்கோங்க...
மணமாகாமல் 35 வயது வரை இருப்பவர்களுக்கு மன ரீதியாக் உண்டாகும் தாக்கங்கள் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது
இதில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இருக்கின்றனர். பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்த காலத்துப் பெண்கள் படிப்பு மற்றும் வேலைக்குத் தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் ஒருவரின் துணையை ஏற்க மறுத்து திருமண ஆசையை விடுத்து தனித்து வாழவே விரும்புகின்றனர்.

பெரும்பாலும், 35-40 வயது வரை உள்ள திருமணமாகாத பெண்கள் ஆண்கள் அனைவருமே நகர்புறத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். நகர்புற வாழ்க்கை முறை ஒரு மனிதரின் வாழ்க்கை முற்றிலும் மாற்றி தனித்து வாழும் விருப்பத்தை உண்டாக்குகிறது என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகின்றது.
வாருங்கள் இப்போது 35 வரை அப்படி திருமணமாகாமல் இருப்பதால் நேரக் கூடிய சில அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி பார்ப்போம்...

உண்மை # 1
எல்லா உறவுகளுக்கும் ஒரு வரம்பு என்பது உள்ளது. அப்படி எந்த வரம்பும் இல்லாமல் தன்னிச்சையாக தங்கள் விருப்பத்துடன் 35 வயது வரை வாழ்ந்துவிட்டு அதன் பின் அனைவருக்கும் கட்டுப்பட்டு திருமணம் செய்து ஒரு வரம்புடன் வாழ வேண்டும் என்றால் அது கஷ்டமாகத் தான் இருக்கும். எனவே, இது திருமணம் செய்துக் கொள்ளும் ஆசையை மறுத்து தனித்து வாழ மனமானது விரும்பக் கூடும்.

உண்மை # 2
கல்யாணம் செய்து கொள்ளும் போது முதலில் சந்தோஷமாகத் தான் இருக்கும். ஆனால் போக போக மன அழுத்தம், வீட்டு பொறுப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதுவே நீங்கள் தனியாக இருந்தால் இவை எதுவும் இருக்காது. அதுவும் 35 வயது வரை தனியாக சந்தோஷமாக இருந்துவிட்டு இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும் போது செய்யாமல் இருப்பதே மேல் என்று தான் தோன்றும்.

உண்மை # 3
தனியாக இருந்தால் வாழ்க்கையை நீங்கள் நினைக்கும் படி மாற்றிக் கொள்ள முடியும். நினைத்த இடத்திற்குப் போகலாம், நினைத்த நேரத்தில் வேலை விடலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். இவை யாரையும் எந்த வகையிலும் பாதிக்காது.

உண்மை # 4
நீங்கள் தனியாக இருந்தால் உங்கள் வேலையில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்த முடியும். 35 வயதிற்குப் பிறகு இவை அனைத்தையும் தியாகம் செய்ய முடியுமா உங்களால்? இதுவும் ஒரு காரணம்.

உண்மை # 5
நீங்கள் தனியாகவே 35 வயது வரை இருந்து பழகிவிட்டால் பின்னர் திருமணமான பிறகு உங்களின் வாழ்க்கை துணையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை கண்டிப்பாக விரும்பமாட்டீர்கள் அல்லவா? இது ஒரு முக்கிய காரணம் தனித்து வாழ்வதில்.

உண்மை # 6
சந்தோஷமாக 35 வயது வரை தனியாக வாழ்ந்துவிட்டால், உங்களால் மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழப்பிடிக்காது பொதுவாக.
அதுவும் நீங்கள் பார்த்த கல்யாணமான தம்பதிகள் தினசரி சண்டை போடுபவர்களாகவும், சந்தோஷமான வாழ்க்கை வாழாமலும், ஏமாற்றங்களை சந்தித்தவர்களாகவும் இருப்பதை பார்த்திருந்தால் அது இன்னமும் கடினமாகிவிடும். பின்னர் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.

உண்மை # 7
தனித்து வாழ்வதின் சிறப்பம்சம் என்பதே உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் நினைத்த நேரத்தில் இருக்கலாம். இது தான் நகர்புற பெண்கள் ஆண்களின் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கிறது தனித்து வாழ்வதற்கு.



Click it and Unblock the Notifications
