Latest Updates
-
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்.. -
ஜூன் 29-ல் நிகழும் புதனின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்காரர்களை பணக்கஷ்டம் துரத்தப்போகுதாம் -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. -
ஐயங்கார் ஸ்டைல் கதம்ப சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைக்காது -
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்.. -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்களிடம் பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா
காதலை காதலியிடம் சொல்ல தயங்குறீங்களா?

* முதலில் காதலை காதலியிடம் சொல்லும் போது, காதலியின் குணத்தை நன்கு தெரிந்து கொண்டு, பின்னர் சொல்லச் செல்ல வேண்டும்.
* பின்பு எவ்வாறு பேச வேண்டும் என்று ஒரு முறை ஒத்திகைப் பார்ப்பது மிகவும் சிறந்தது. ஏனேனில் முதலில் எப்படி பேசுகிறோமோ, அது தான் கடைசி வரையில் அவர்களது மனதில் இருக்கும். ஆகவே இதனை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு வெளிப்படுத்துங்கள்.
* அதிலும் பெண்கள் எந்த டென்சனும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் நேரத்தில், உங்கள் காதலை தெரிவித்தால், அப்போது தான் உங்கள் அன்பு காதலாக மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் அவர்கள் உங்களுடன் எப்போது பேச விரும்புகிறார்களோ, அப்போது சொன்னால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும் வாய்ப்புகள் அதிகம்.
* முக்கியமாக பெண்களுக்கு, தங்களை பற்றி மிகவும் வர்ணித்து, பாராட்டி பேசினால் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர்களிடம் பேசும் போது, நேராக காதலை சொல்லாமல், சற்று அவர்கள் சந்தோஷப்படும் வகையில் சிலவற்றை சொல்லி, பின்னர் காதலை சொன்னால் அந்த சந்தோஷத்தில் அவர்கள் உங்கள் காதலை ஏற்க வாய்ப்புக்கள் உள்ளது. அதற்காக அனைத்துப் பெண்களையும் அப்படி சொல்ல முடியாது, அது ஒவ்வொருவர் குணத்தைப் பொறுத்தது.
* அனைத்துப் பெண்களுக்கும் மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே காதலை சொல்லும் போது, ஒரு மலர் கொத்துக்களை வாங்கிக் கொண்டு, அவர்களிடம் கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம்.
* பெண்களுக்கு எப்போதும் மறைமுகமாக பேசினால் பிடிக்காது. ஆகவே எப்போதும் காதலை சொல்லச் செல்லும் போது, அவர்களிடம் மொக்கை போடாமல், நேரடியாக காதல் செய்வது சம்பந்தமாக மட்டும் பேசி, காதலை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அந்த மொக்கையிலேயே அந்த காதல் தோல்வியில் முடிந்துவிடும்.
* உங்களுடன் மிகுந்த நட்போடு பழகும் பெண்களாக இருந்தால், அவர்கள் உங்களிடம் காதலை வெளிப்படுத்தாமல், உங்கள் மீது அதிக உரிமையோடு, தேவையில்லாத காரணத்திற்கெல்லாம் சண்டை போடுபவராக இருந்தால், அப்போது அவர்கள் உங்களை காதலிக்கிறார், ஆனால் காதலை சொல்ல தயங்குகிறார் என்பதைப் புரிந்து, அந்த நேரத்தில் உங்களிடம் இருக்கும் காதலை வெளிப்படுத்தலாம். (முக்கியமாக காதல் செய்கிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு பின்னர் இவ்வாறு செய்ய வேண்டும்.)
* மேற்கூறிய அனைத்தையும் விட முக்கியமானவை, காதலை தெரிவிக்கும் போது உங்கள் பேச்சு, பாவனை அனைத்துமே, அவர்கள் மீது இருக்கும் அன்பை காட்டும் வகையில் இருக்க வேண்டும். உங்களுக்கு காதலியிடம் தனியாக பேசும் வாய்ப்பு கிடைக்கும் போது, சற்றும் தயங்காமல், மனதில் இருக்கும் அனைத்தையும் அன்போடு சொல்லிவிட்டால், அப்போதே காதலுக்கான பதில் தெரிந்துவிடும்.
ஆகவே நண்பர்களே! காதலைச் சொல்லும் போது மேலே சொன்ன அனைத்தையும் மனதில் கொண்டு, பின்னர் அதற்கு ஏற்றாற்போல் நடந்தால், உங்கள் காதல் நிச்சயம் வெற்றியில் முடியும். ஆகவே "சொல்லத் தான் நினைக்கிறேன்...சொல்லாமல் தவிக்கிறேன்...காதல் சுகமானது..." என்று இல்லாமல், காதலை சொல்லுங்க... காதல் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணுங்க...



Click it and Unblock the Notifications