Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எப்போதெல்லாம் 'ஸாரி' சொல்லணும் தெரியுமா?

1. "7 மணி சினிமாவிற்கு 8 மணிக்கு வீட்டிற்கு வருதல்" - அனைத்து வீடுகளிலும் பெரும்பாலும் இந்த காரணத்திற்காகத் தான் சண்டையே ஆரம்பமாகும். இவ்வாறு சண்டை ஏற்படும் போது கோபமாக இருக்கும் உங்கள் துணையிடம் முதலில் 'ஸாரி' என்று மறக்காமல் கூறி, பிறகு அவர்களது கோபத்தை முற்றிலும் போக்க, அவர்களிடம் அடுத்த ஷோவிற்கான டிக்கெட் கிடைத்தால் கண்டிப்பாக போகலாம் என்று சொல்லி டிக்கெட் வாங்கிவிட்டால், நீங்கள் செய்த தவறு அவர்கள் மனதில் இருக்காமல் மறைந்துவிடும். அவ்வாறு செய்யாமல் இருந்தால் பிறகு என்ன நடக்கும்? வீடு தான் இரண்டாகும்.
2. வெளியே செல்ல மனைவி அழைக்கும் போது, நண்பர்களது வேண்டுகோளுக்கிணங்க மனைவியிடம் வேலை இருக்கிறது என்று பொய் சொல்லி, நண்பர்களுடன் வெளியே சென்று 'கிரிக்கெட் மேட்ச்' விளையாட சென்று இருப்பீர்கள். இந்த விஷயம் மனைவிக்கு வேறு வழியில் தெரிந்தால், பிறகு நீங்கள் அவ்வளவு தான். ஆகவே வீட்டிற்கு வந்ததும் அவர்கள் நல்ல மனநிலையில், மகிழ்ச்சியாக இருக்கும் போது நடந்ததை சொல்லி, அந்த நேரத்தில் 'ஸாரி' கேட்க வேண்டும். அதுவும் அப்படி கேட்கும் போது முகத்தை 'ஹட்ச் டாக்' போல் சுருக்கி கேளுங்கள். கண்டிப்பாக அவர்கள் சிரித்து நீங்கள் செய்ததை மறந்துவிடுவார்கள்.
3. மனைவி வீட்டில் ஆசையாக, சுவையாக சமைத்து வைத்திருக்க, கணவன் நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வரும் போது வீட்டில் சண்டை வெடிக்கும். ஆமாம் பின்னர் என்ன, மனைவி காலையிலேயே சொல்லி அனுப்பியும் சாப்பிட்டு வந்தால் கோபம் வராதா? என்ன? ஆகவே அந்த சமயத்தில் மறக்காமல் அவரிடம் செய்த தவறை உணர்ந்து 'ஸாரி' என்று கேட்டு, பிறகு அவர்களிடம் பசிக்கிறது என்று கூறி அவர்கள் சமைத்த உணவை, அவர்கள் முன்னே வயிறு வெடிக்கும் அளவு உண்பது போல் சிறு நாடகம் நடித்து பாருங்கள், அவர்கள் கண்டிப்பாக சமாதானமாவார்கள்.
4. ஊரில் இருந்து மனைவி வரும் போது, அவர்களை அழைத்து வருவதை மறந்துவிட்டு நேரம் போவது தெரியாமல், ஆபிஸில் வேலை செய்து கொண்டிருப்பீர்கள். பிறகு நேரத்தை பார்க்கும் போது தான் அவர்கள் காத்துக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வரும். ஆனால் மனைவி வீட்டிற்கு எப்படியாவது சென்றிருப்பாள் என்பது தெரியும். அந்த நேரத்தில் வீட்டிற்கு சென்று வெறும் 'ஸாரி' மட்டும் கேட்டால் கோபம் போகாது, ஐஸ் வைக்க அவர்களுக்கு ஒரு மலர் கொத்துகளை வாங்கிக் கொண்டு, அதோடு 'ஸாரி' சொல்லுங்கள். சற்று நேரம் கோபம் இருக்கும், ஆனால் நீங்கள் கொஞ்சம் பேசி புரிய வைத்தால் போய்விடும்.
ஆகவே இந்த நேரங்களில் எல்லாம் மறக்காமல் 'ஸாரி' சொல்லினால், வாழ்க்கையானது மகிழ்ச்சியாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர் அனுபவசாலிகள்.



Click it and Unblock the Notifications