Latest Updates
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
உண்மையான காதலில் நிபந்தனை இருக்காது!!!

பொதுவாக காதல் என்பது எந்த ஒரு எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் வருவது என்பார்கள். ஆனால் அத்தகைய காதல் இந்த உலகில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கேட்டால் அதுவும் மிகவும் குறைவானதாகவே இருக்கும். அதிலும் காதல் செய்து திருமணம் செய்பவர்களுக்குள் சண்டைகள் வருவதற்கு பெரும் காரணம், உபயோகிக்கும் வார்த்தைகளே. அது என்ன நிபந்தனை என்று கேட்கிறீர்களா?
உதாரணமாக, பொதுவாக காதலானது ஒருவர் மீது வருகிறதென்றால், ஒன்று அது அவர்கள் உங்கள் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருப்பதாலும் வரும், மற்றொன்று நீங்கள் என்ன சொன்னாலும் உங்கள் துணை கேட்பதாலும் வரும். அவ்வாறு நீங்கள் சொல்லி கேட்டு வரும் காதலில் எந்த ஒரு சந்தோஷமும் இருக்காது. அவ்வாறு சந்தோஷம் இருந்தாலும் அது நீண்ட நாட்கள் நிலைப்பது இல்லை.
அவ்வாறெல்லாம் இல்லை என்று நினைப்பவர்கள், உங்கள் வாழ்க்கைத்துணையிடம் நீங்கள் எதாவது சொல்லி, அவர்கள் செய்யாமல் இருந்து, உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் அதுவே உண்மையானக் காதல். அத்தகையவர்களது காதல் அல்லது திருமண வாழ்க்கையிலேயே எந்த ஒரு சண்டையும், பிரச்சனையும் இருக்காது.
இத்தகைய காதல் அல்லது திருமண வாழ்க்கையில், கணவன்-மனைவி இடையே எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க ஒருசில வழிகளை அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
மனைவிக்கு எல்லாம் தெரிகிறதோ, தெரியவில்லையோ, கணவன் தன் மனைவியை அப்போதும் மனதளவில் உண்மையாக காதலிக்க வேண்டும். இதே மாதிரியான காதலை மனைவியும் கணவனிடம் செலுத்த வேண்டும்.
உங்கள் கணவன்/மனைவியிடம் என்ன இருக்கிறது? என்ன இல்லை? என்று பார்க்க வேண்டாம். எது நடந்தாலும் உங்களை விட்டு வாழ்க்கை துணை, எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், ஒரே விதமான காதலை, அன்பைக் காட்டுகிறார்களா என்பதை மட்டும் பார்த்து சந்தோஷப்படுங்கள்!
மிகவும் முக்கியமான ஒன்று எந்த ஒரு தேவையில்லாத அசிங்கமான வார்த்தைகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் பல உணர்ச்சிகள் நரம்புகளிடையே ஆங்காங்கு உள்ளது. அது உடைந்து வெளிவர துடித்துக் கொண்டிருக்கும். எப்படி வெடிகுண்டுகளில் சிறிது நெருப்பு பட்டால் உடனே வெடிக்குமோ, அது போல் நாம் பயன்படுத்தும் ஒரு சில வார்த்தைகள் வாழ்க்கைத்துணைக்கு கோபத்தை ஏற்படுத்தி, பின் வாழ்க்கையே நாசமாகிவிடும்.
தவழும் குழந்தை எப்படி நடக்கும் போது விழுந்து விழுந்து நடக்கும். அப்போது அதன் பெற்றோர்கள் அருகில் இருந்தால், விழுந்ததன் காரணமாக அழத் தொடங்கும். அதுவே அவர்கள் இல்லை என்றால் நன்கு சிரித்துக் கொண்டு விளையாடும். அது போல் தான், அனைத்து மனிதர்களும் தங்கள் மீது அன்பு கொண்டவர்கள், திடீரென்று அன்பு செலுத்தாமல் இருப்பதால், அப்போது வரும் சண்டைகள், அவர்களை கவனிக்காமல் இருப்பதாலேயே வருகிறது. ஆகவே இதை புரிந்து கொண்டு கவனிப்பு என்னும் மனக்கதவை திறந்து வைத்துப் பாருங்கள், வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் அனுபவசாலிகள்.



Click it and Unblock the Notifications
