Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
வாழ்க்கை பரிட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கணுமா?

நிச்சயதார்த்தம் தினத்தன்று திடீரென்று தனியாக பேச வேண்டும் என்று கூறியதும், பதட்ட நிலையில் இருக்கும் பெண்கள் தன்னிடம் என்ன கேட்பார்களோ ஏது பேசுவார்களோ என்று அஞ்சிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்காகவே ஆண்கள் கேட்கும் கேள்விகள் என்னென்னவென்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
ஆண்கள் அதிகம் கேட்கும் கேள்விகளில் ஒன்று தான், 'சமைக்கத் தெரியுமா?'. ஏனென்றால் ஆண்களுக்கு உணவு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான ஆண்கள் திருமணத்திற்கு முன் ஹோட்டலில் தான் அதிகம் சாப்பிட்டு இருப்பார்கள். அதனால் அவர்கள் திருமணத்திற்குப் பின்னும் ஹோட்டலில் சாப்பிட விரும்பமாட்டார்கள், தன் மனைவி கையால் வீட்டில் சாப்பிடுவதையே விரும்புவர். ஆகவே நல்லா சமைக்கத் தெரிஞ்சா நீங்க பாஸ் தான்.
அடுத்ததாக கேட்பது, 'என் பெற்றோருடன் சேர்ந்து வாழ விருப்பமா?'. ஏனென்றால் ஆண்களுக்கு அவர்கள் பெற்றோர் மீது பாசம் அதிகம். ஆனால் பெண்கள் தன் கணவருடன் பெரும்பாலும் தனியாக இருப்பதையே விரும்புவர். ஏனெனில் அவர்கள் இருந்தால் தமது திருமண வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பெண்கள் நினைப்பர். இதை கருத்தில் கொண்டே ஆண்கள் இப்படி கேட்கின்றனர். இதற்கு ஆண்கள் பெரும்பாலும் அனுசரித்து செல்பவரையே விரும்புவர்.
'என்னோட போதிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி விடுவாயா?' என்று கேட்பது. எல்லா ஆண்களுக்கும் தாம் எவ்வளவு சம்பாதித்தாலும், அது அவர்களுக்கு குறைவாகவே தோன்றும். அவர்கள் இன்னும் சம்பாதிக்க வேண்டும் என்றே இருப்பர். மேலும் எதிர் காலத்தில் சந்தோஷமாக இருக்கவே சேமித்து வைக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருப்பர். ஆகவே தனக்கு வருபவளும் தன் வருமானத்தை வைத்து சந்தோஷமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்றே இந்த கேள்வியை கேட்கின்றனர் என்றும் கூறுகின்றனர்.
'என்னை அனுசரித்து, வளைந்து கொடுத்து போவாயா?'. குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைய இந்த கேள்வியை கேட்கின்றனர். ஏனென்றால் சில பெண்கள் புரிந்து கொள்ளாமல், அனுசரிக்க பிடிக்காமல் பிரிந்து விடுகின்றனர், அதற்காகவே இதை கேட்கிறார்கள். குடும்பத்தில் அனுசரித்து, வளைந்து கொடுத்து சென்றால் தான் வாழ்க்கையானது இனிமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் எனவே பெண்களே இந்த கேள்விக்கெல்லாம் சரியான பதிலை சொல்லிவிட்டால் வாழ்க்கைப் பரிச்சையில் நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்று பாஸ் செய்து விடுவீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications
