Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
காதல் புறா கண்ணில் சிக்குமா?: காதலர் தின நம்பிக்கைகள்

வாழ்த்து அட்டையா வேண்டாம்
காதலர் தினத்திற்காக வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுவது தற்போது முக்கிய அம்சமாக உள்ளது. ஆண்டுதோறும் காதலர் தினத்தன்று மட்டும் பத்து லட்சம் வாழ்த்து அட்டைகள் விற்பனையாவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. ஆனால் விக்டோரிய மகாராணி காலத்தில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை பரிசளிக்க தடை உண்டு. ஏனெனில் வாழ்த்து அட்டை பரிமாற்றம் செய்தால் அந்த காதல் வெற்றி பெறாதாம். எனவேதான் வாழ்த்து அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
குலுக்கல் முறை தேர்வு
காதலியர் தங்கள் மனம் கவர்ந்தவர்களின் பெயர்களையெல்லாம் ஒரு பாத்திரத்தில் எழுதிப் போடுவார்கள். பாத்திரத்தைக் குலுக்கி எடுக்கும் போது வரும் பெயர் தான் அவளுடைய கணவன். இது பதினேழாம் நூற்றாண்டுகளில் நிலவி வந்த பாப்புலர் வழக்கம்.
மனதுக்கு பிடித்தவர்
காதலர் தினத்தன்று சந்திக்கும் ஆணைத் திருமணம் செய்து கொள்வோம் எனும் நம்பிக்கை பண்டைக் காலத்தில் பரவியிருந்தது. அதனால் தன் மனதுக்குப் பிடித்தவரைச் சந்திக்க வேண்டுமே என பெண்கள் காத்திருப்பார்களாம். தனக்கு ஒரு காதலி கிடைப்பாளா என ஆண்களும் காதலர் தினத்தன்று அங்கும் இங்கும் அலைந்து திரிவார்களாம்.
காதல் புறா
காதலர் தினத்தன்று காதலியின் கண்ணில் எந்தப் பறவை தென்படுகிறதோ அது அவளுடைய கணவனின் தன்மையைச் சொல்லும் என்பது காதலர் தினத்தன்று உலவி வந்த பண்டைய நம்பிக்கைகளின் ஒன்று. புறாவைக் காணவேண்டும் என்றுதான் பல பெண்களும் விரும்புபவார்களாம். ஏனெனில் காதலர் தினத்தன்று புறாவைக் கண்டால் காதல் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும் என்றும், அமையும் கணவன் மிகவும் இரக்கமும், அன்பும், நேசமும் உடையவனாக இருப்பான் என்பதும் நம்பிக்கை.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்னர் புறா விடு தூது பிரபலமடைந்தது. அதே சமயம் மரங்கொத்தி மட்டும் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்வார்களாம். ஏனெனில் மரங்கொத்தியை கண்டால் காதல் வெற்றி பெறாது என்பது அவர்களின் நம்பிக்கை.
தமிழ்நாட்டில் கைக்குட்டையை பரிசளித்தால் அந்த காதல் கைகூடாது என்பது காதலர்களிடையே பரவலான நம்பிக்கையாக உள்ளது.



Click it and Unblock the Notifications
