Latest Updates
-
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
2 முட்டையும் 1/2 கப் பாலும் இருந்தாலே போதும்.. ருசியான பாஸ்தாவை செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
White Sauce Egg Pasta Recipe In Tamil: இன்று இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்யலாம் என்றால் உங்கள் வீட்டில் உள்ளோர் வேண்டாம் என்று கூறுகிறார்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பாஸ்தா என்றால் பிடிக்குமா? ஆனால் வீட்டில் பாஸ்தா இல்லையா? அப்படியானால் கவலை வேண்டாம். வீட்டில் முட்டையும், பாலும் இருந்தால் போதும், சுவையான பாஸ்தா செய்யலாம். அதுவும் ஒயிட் சாஸ் முட்டை பாஸ்தாவை செய்யலாம்.

இந்த பாஸ்தாவின் ஸ்பெஷலே, பாஸ்தா சேர்க்காமல் பாஸ்தாவை செய்வது தான். என்ன புரியலையா? இந்த பாஸ்தா ரெசிபியில் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பாஸ்தா பயன்படுத்தாமல், முட்டையைக் கொண்டு பாஸ்தாவை செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான பாஸ்தாவை செய்து கொடுக்க நினைத்தால், இதை செய்து கொடுங்கள்.
உங்களுக்கு முட்டைக் கொண்டு எப்படி ஒயிட் சாஸ் முட்டை பாஸ்தாவை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஒயிட் சாஸ் முட்டை பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* பால் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
ஆம்லெட்டிற்கு..
* முட்டை - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் சிறிது
உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து சூடானதும், 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி பரப்பி விட்டு, முன்னும்,
பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த ஆம்லெட்டை ரோல் போன்று அப்படியே உருட்டி, கத்தியால்
துண்டுகளாக்க வேண்டும். இப்போது முட்டையானது பாஸ்தா போன்று நீள நீளமாக
இருக்கும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் வெண்ணெய்
சேர்த்து உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சோள மாவை சேர்த்து கிளறி, 1/2 கப் பாலை ஊற்றி நன்கு
கொதிக்க விட வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் துண்டுகளாக்கப்பட்ட
முட்டையை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள்
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஒயிட் சாஸ் முட்டை பாஸ்தா
தயார்.
Image Courtesy: Yummy Tummy Aarthi



Click it and Unblock the Notifications











