Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
Wheat Idli With No Coconut Chutney Recipe In Tamil: காலையில் டிபன் செய்ய இட்லி மாவு இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் கோதுமை மாவு இருந்தாலே, பஞ்சு போன்ற சாஃப்ட்டா இட்லியை செய்யலாம். இந்த கோதுமை இட்லி வழக்கமான இட்லியை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி பொருத்தமாக இருக்கும். இந்த இட்லி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. ஏனெனில் இதில் வேண்டிய காய்கறிகளை வதக்கி சேர்த்து செய்யலாம்.

உங்களுக்கு இந்த கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை இட்லி மற்றும் தேங்காய் இல்லாத தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டியான தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
* வதக்கிய பொருட்கள்
* எண்ணெய் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
சட்னிக்கு...
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 5
* சின்ன வெங்காயம் - 10
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
சட்னி தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் கோதுமை மாவை
சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு பாத்திரத்தில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்
வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து கோதுமை மாவில் சுவைக்கேற்ப உப்பு, கெட்டியான தயிரை ஊற்றி,
கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கட்டிகளின்றி கைகளால் கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* முக்கியமாக மாவை இட்லி மாவு பதத்திற்கு கலந்து, அத்துடன் சமையல்
சோடாவை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* அதன் பின் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டின் குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள
மாவை இட்லி குழிகளில் ஊற்றி, பின் இட்லி பாத்திரத்தினுள் அந்த தட்டை
வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, குளிர வைத்து எடுத்தால்,
சுவையான கோதுமை இட்லி தயார்.
* அடுத்து சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை மற்றும் பூண்டு பற்களை சேர்த்து
சூடாகும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நிறம் மாற
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சிறிய துண்டு புளியை சேர்த்து வதக்கி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை,
பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அதில்
சட்னியை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்தால், சுவையான தேங்காய்
இல்லாத தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications