Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
ஒரு கப் கோதுமை மாவு வெச்சு.. 10 நிமிடத்தில் ஈவ்னிங் இப்படி மொறுமொறுன்னு சுட்டு கொடுத்து பாருங்க..
Wheat Flour Murukku Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் கேப்பாங்களா? எப்பவும் பஜ்ஜி, போண்டா செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு 10 நிமிடத்தில் அற்புதமான சுவையில் முறுக்கு செய்து கொடுங்கள்.
என்னது கோதுமை மாவில் முறுக்கா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம், கோதுமை மாவைக் கொண்டும் முறுக்கு சுடலாம். இந்த முறுக்கு வழக்கமாக சுடுவது போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக மாவை வேக வைத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் இந்த முறுக்கு சுவையாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும்.

உங்களுக்கு இந்த கோதுமை முறுக்கை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை முறுக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதன் மேல்
இட்லி தட்டை வைத்து, மேலே ஒரு துணியை விரித்து, அதில் கோதுமை மாவை
போட்டு சுற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* பின் வேக வைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேக வைத்த மாவானது சற்று கட்டியாக இருக்கும். இந்த கட்டிகளை உடைக்க,
அந்த மாவை மிக்சர்ஜாரில் போட்டு 3-4 முறை அடித்து ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும். மாவை இப்படி வேக வைக்கும் போது, மாவில்
உள்ள பிசுபிசுப்புத்தன்மை போய், முறுக்கு பிழிய வசதியாக
இருக்கும்.
* பின்பு அந்த மாவுடன் மிளகாய் தூள், பெருங்காயத் தூள், ஓமம், உப்பு
மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் முறுக்கு உழக்கை எடுத்து, அதனுள் ஸ்டார் அச்சை வைத்து, உள்ளே
எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள முறுக்கு மாவை வைத்து, முறுக்குகளாக
ஒரு துணியில் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை
சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான கோதுமை
முறுக்கு தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications