Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
சன்டே ஸ்பெஷல்: காரசாரமான... விருதுநகர் மட்டன் சுக்கா
Viruthunagar Mutton Chukka Recipe In Tamil: வார விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவரது வீடும் நன்கு கமகமவென்று மணக்கும். வீட்டில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து பொறுமையாக சுவைத்து சாப்பிடுவோம்.
நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு வித்தியாசமான அசைவ ரெசிபியை செய்ய நினைப்பவராயின், இந்த வாரம் மட்டனைக் கொண்டு விருதுநகர் ஸ்டைலில் சுக்கா செய்யுங்கள். இந்த விருதுநகர் மட்டன் சுக்கா ரசம் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

முக்கியமாக இந்த மட்டன் சுக்காவை நீங்கள் வீட்டில் செய்தால் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுவிடலாம். உங்களுக்கு விருதுநகர் மட்டன் சுக்கா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே விருதுநகர் மட்டன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்ச தூள் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மட்டனை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மட்டன் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் 1 டம்ளர் நீரை ஊற்றி, குக்கரை மூடி 5-8 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு வரமிளகாய் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து, அத்துடன்
மிளகாய் தூள், சோம்பு தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* மசாலா அனைத்தும் மட்டனுடன் ஒன்று சேர்ந்த பின், அடுப்பை அணைத்து
இறக்கினால், சுவையான விருதுநகர் மட்டன் சுக்கா தயார்.
Image Courtesy: lekhafoods



Click it and Unblock the Notifications
