Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
கிராமத்து ஸ்டைலில் சிக்கன் ப்ரை செய்வது எப்படி-ன்னு தெரியுமா?
Village Style Chicken Fry Recipe: நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி வீட்டில் சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கன் ப்ரையை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் நீங்கள் செய்யும் சிக்கன் ப்ரை எதிர்பார்த்த சுவையில் இருக்காதா? எப்போதும் கடையில் விற்கப்படும் சிக்கன் ப்ரை மசாலாவை வாங்கி தான் செய்வீர்களா?
அப்படியானால் இனிமேல் அப்படி செய்யாதீர்கள். ஏனெனில் வீட்டிலேயே சிக்கன் ப்ரைக்கான அட்டகாசமான மசாலாவை செய்யலாம். சொல்லப்போனால், கிராமப்புறங்களில் இந்த மாதிரி தான் மசாலாவை செய்து சிக்கனை வறுப்பார்கள்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைலில் சிக்கன் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் சிக்கன் ப்ரைக்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 500 கிராம்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன்
* மைதா - 4 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
* சிவப்பு நிற கேசரி பவுடர் - சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு..
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து
நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிக்கனை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள்,
சீரகத் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகத் தூள்,
எலுமிச்சை சாறு, மைதா, அரிசி மாவு, கேசரி பவுடர் ஆகியவற்றை சேர்த்து
நன்கு பிரட்டி, 1-2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான சிக்கன் ப்ரை தயார்.
Image Courtesty: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
