வேர்க்கடலை வைச்சு வெங்காயம், தக்காளி இல்லாம இப்படி கார குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்

Posted By:

Verkadalai kara Kuzhambu Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். சாம்பார் வைத்து சலித்துப் போனால் அனைவரும் வைப்பது புளிக்குழம்பைத்தான். பொதுவாக புளிக்குழம்பு என்றாலே வாழைக்காய், வெண்டைக்காய், கருணைக்கிழங்கு போன்றவற்றை வைத்துதான் செய்வோம். இப்படி ஒரே மாதிரியான காய்கறிகளை வைத்து புளிக்குழம்பு வைப்பதற்குப் பதிலாக ஏதாவது புது புளிக்குழம்பை முயற்சிக்கலாம்.

Verkadalai Kara Kuzhambu Recipe How to Make at Home in Tamil

வேர்க்கடலை மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும், பொதுவாக வேர்க்கடலையை அப்படியே சாப்பிடுவதோ, சட்னி அரைக்கவோ அல்லது தாளிக்க மட்டும்தான் யன்படுத்துவோம். ஆனால் வேர்க்கடலையை வைத்து ஒரு அட்டகாசமான புளிக்குழம்பை செய்யலாம். இந்த புளிக்குழம்பு காரசாரமாக சுவையானதாக இருப்பதுடன் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு வேர்க்கடலை புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை புளிக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- வேர்க்கடலை - 1 கப்
- புளி கரைசல் - ½ கப்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ½ ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- வெல்லம் - ½ ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
-தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைக்க வேண்டியவை:

- வர மிளகாய் - 2
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
- மல்லி விதைகள் - ½ ஸ்பூன்

செய்முறை:

- நிலக்கடலையின் தோலை நீக்கிவிட்டு, பின்னர் நன்றாகக் கழுவவும்.

- ஒரு கடாயில் மல்லி விதை, வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.

- பின்னர் இது ஆறியதும் சிறிதளவு நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் நிலக்கடலையைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வேகவைக்கவும்.

- நிலக்கடலையை குக்கரில் வேக வேண்டாம், ஏனெனில் அது ஊட்டச்சத்துக்களை இழக்கக்கூடும்.

- ஒரு வாணலியில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, கடுகு சேர்த்து அது வெடிக்கும் வரை காத்திருக்கவும்.

- அதன் பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

- வேகவைத்த நிலக்கடலை, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

- மசாலா பச்சை வாசனை போனதும் புளிக்கரைசலைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க விடவும்.

- பின்னர் வெல்லம் மற்றும் வறுத்து அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து, 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

- இறுதியாகக் கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான் சூப்பரான வேர்க்கடலை புளிக்குழம்பு ரெடி.

- இதை சூடான சாதம் மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Friday, November 20, 2026, 12:19 [IST]
Desktop Bottom Promotion