Latest Updates
-
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்!
இட்லி, தோசைக்கு இப்படி வெங்காய சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறாக இருக்கும்..
Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை செய்வீர்களா? அதற்கு எப்போதும் உங்கள் வீட்டில் உள்ளோர் சட்னியை தான் எதிர்பார்ப்பார்களா? சட்னியில் பல வகைகள் உள்ளன. ஆனால் அதில் பெரும்பாலான வீடுகளில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி, வெங்காய சட்னி என்று செய்வார்கள்.

அதுவும் வெங்காய சட்னியை எடுத்துக் கொண்டால், அதை பல விதங்களில் செய்யலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். அதில் ஒருவிதம் குறித்து தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்குவத்தில் வெங்காய சட்னியை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* கொத்தமல்லி - சிறிது
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த சட்னி
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய வெங்காயம், சீரகம், பூண்டு,
கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிது புளி, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த சட்னியை சேர்த்து கிளறி, மூடி வைத்து 10
நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* சட்னியில் இருந்து பச்சை வாசனை போய், எண்ணெய் பிரியத் தொடங்கியதும்,
அடுப்பை அணைத்துவிட்டால், சுவையான வெங்காய சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
