Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
10 வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி அருமையான புலாவ் செய்யுங்க - வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
Vendakkai Pulao Recipe in Tamil: பொதுவாக கலவை சாதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது புளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவைதான். இந்த வகையான கலவை சாதங்கள் செய்வதற்கு மிகவும் எளிமையானது மற்றும் சுவையானது, அதனால்தான் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு மதிய உணவாக இது செய்து கொடுக்கப்படுகிறது.

எவ்வளவு நாட்கள்தான் இந்த சாதங்களையே குழந்தைகள் சாப்பிடுவார்கள். கொஞ்சம் வித்தியாசமாக அதேசமயம் ஆரோக்கியமான வேறு வகையான சாதங்களை செய்து கொடுக்கும் போது குழந்தைகள் அவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட வித்தியாசமான சாதங்களில் ஒன்றுதான் வெண்டைக்காய் புலாவ். பொதுவாக குழந்தைகள் வெண்டைக்காய் என்றால் அவ்வளவாக சாப்பிட மாட்டார்கள், ஆனால் இந்த ஸ்டைலில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
உங்களுக்கு இந்த ஆரோக்கியமான வெண்டைக்காய் புலாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 10 வெண்டைக்காய்
- ½ கப் பாசுமதி அரிசி
- 1 பெரிய வெங்காயம்
- ½ தக்காளி
- 2 ஸ்பூன் சாம்பார் பொடி
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 10 முந்திரிப் பருப்பு
- தேவையான அளவு உப்பு
- அலங்கரிக்கக் கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- அரை கப் பாசுமதி அரிசியைக் கழுவி, முக்கால் கப் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- பாசுமதி அரிசியை முக்கால் கப் தண்ணீரில் சேர்த்து, பிரஷர் குக்கரில் 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
- பிரஷர் வெளியேறியதும் இதை ஒரு தட்டில் பரப்பி ஆற வைக்கவும்.
- ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மெல்லியதாக நறுக்கிய ஒரு வெங்காயத்தைச் சேர்க்கவும்.
- சிறிது உப்பு சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் முந்திரிப் பருப்பைச் சேர்த்து, அவை லேசான பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு அரை தக்காளி சேர்த்து நன்றாகக் கலந்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் 2 ஸ்பூன் சாம்பார் பொடி, அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். சாம்பார் பொடி இல்லையென்றால் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் மல்லித்தூளை சேர்க்கலாம்.
- பின்னர் நறுக்கிய வெண்டைக்காயைச் சேர்த்து, மிதமான தீயில் வதக்கவும்.
- வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதனுடன் சமைத்த சாதத்தைச் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகளைத் தூவி கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் புலாவ் ரெடி!



Click it and Unblock the Notifications
