Latest Updates
-
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
வெண்டைக்காயை வைச்சு இந்த மாதிரி சைடிஷ் ஒருதடவை செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...!
Vendakkai Pachadi Recipe in Tamil: வெண்டைக்காய் என்றால் யாருக்குதான் பிடிக்காது. பெரும்பாலான மக்களுக்கு பிடித்த மற்றும் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். ஏனெனில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் உள்ளது. வெண்டைக்காயை பொதுவாக சாம்பார் அல்லது புளிக்குழம்பு வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவோம்.
ஆனால் வெண்டைக்காயை வைத்து பச்சடி செய்தால் அட்டகாசமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக பச்சடி என்றால் மாங்காய் அல்லது கத்தரிக்காய் போன்றவற்றை காய்கறிகளை வைத்துதான் செய்வார்கள். ஆனால் வெண்டைக்காய் பச்சடியும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

பொதுவாக மதியம் சாம்பார் சாதத்திற்கு என்ன சைடிஷ் செய்யலாம் என்று குழம்புபவர்களுக்கு ஈஸியாக செய்யக்கூடிய இந்த வெண்டைக்காய் பச்சடி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஈஸியான மற்றும் சுவையான வெண்டைக்காய் பச்சடியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ
- புளிக்காத கெட்டித் தயிர் - அரை கப்
- கடுகு - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- அச்சு வெல்லம் - சிறிதள்வு
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
செய்முறை:
- காய்ந்த மிளகாயை சிறு, சிறு துண்டுகளாக கிள்ளி, காம்பெடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெண்டைக்காயை சிறிது நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டு மண் இல்லாத படி வடிகட்டிதனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய இவற்றை எல்லாம் வறுத்துக் கொண்டு நீங்கள் நறுக்கிய வெண்டைக்காயையும் போட்டு அது வேகும் அளவிற்குத் தீயாமல் வதக்கவும்.
- பிறகு புளித் தண்ணீரை வெண்டைக்காயில் ஊற்றி தேவையான அளவு உப்பைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
- வெண்டைக்காய் பச்சை வாசனை போகும் வரை நன்கு வேக வைக்கவும், அதன்பின் சுவையை அதிகரிக்க ஒரு சிறிய அச்சு வெல்லத்தை போட்டு அது நன்கு கரையும் வரையில் கிண்டி, அச்சு வெல்லம் நன்கு கரைந்த மாத்திரத்தில் சிறிதளவு அரிசி மாவு கரைத்து ஊற்றி இறக்கி வைக்கவும்.
- பின்னர் நன்கு ஆறிய பிறகு புளிக்காத தயிர் சேர்க்க வேண்டும்.
- சுவையான வெண்டைக்காய் பச்சடி ரெடி. இது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
