Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
வல்லாரை கீரை சாம்பார்
பொதுவாக கீரைகளில் சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இந்த கீரை மூளை நன்கு செயல்படத் தேவையான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே தான் இந்த கீரை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
சரி, இப்போது அந்த வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சாம்பார் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பற்கள்
வல்லாரைக் கீரை - 3 கப் (நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பருப்பு வேக வைக்க...
துவரம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
செய்முறை:
முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் கீரையைப் போட்டு நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், புளிச்சாறு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் குக்கரில் உள்ள பருப்பை மசித்து சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், வல்லாரைக் கீரை சாம்பார் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
