Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
உளுத்தம் பருப்பு சட்னி
உளுத்தம் பருப்பில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுத்தம் பருப்பு சட்னி ஒரு பாரம்பரிய உணவுப்பொருள். இன்னும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்து சாப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.
நீங்களும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைத்தால், உளுத்தம் பருப்பு சட்னியை செய்து சாப்பிடுங்கள். மேலும் இது புளிப்பு, காரம், உவர்ப்பு மற்றும் இனிப்பு கலந்து இருப்பதால், இது தோசை, இட்லி, சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வரமிளகாய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், புளி, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து மென்மையாக அரைத்து, பின் அதில் வெல்லத்தைப் போட்டு அரைத்தால், சுவையான உளுந்து சட்னி ரெடி!!! இந்த சட்னியானது தோசை, இட்லி மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
