Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சிவப்பு முள்ளங்கி மசாலா
இன்று ஆடி வெள்ளிக்கிழமை, அனைவரது வீட்டிலும் சாம்பார், பொரியல், பாயாசம், வடை என்று செய்து மதிய வேளையில் ஒரு குட்டி விருந்தே சாப்பிடுவார்கள். அப்படி செய்யும் போது, அவற்றுடன் சிவப்பு முள்ளங்கி மசாலாவையும் சேர்த்து செய்து பாருங்கள். நிச்சயம் இது அருமயான சுவையில் உங்கள் விருந்தை இன்னும் மணக்கச் செய்யும்.
இங்கு அந்த சிவப்பு முள்ளங்கி மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சிவப்பு முள்ளங்கி/டர்னிப் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
மல்லி - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3-4
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 2
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் டர்னிப் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய், சீரகம், வெந்தயம், வரமிளகாய், மல்லி சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு முறை வதக்கி, அடுத்து தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, டர்னிப்பையும் உடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 7-10 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சிவப்பு முள்ளங்கி/டர்னிப் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
