Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தக்காளி சூப்
மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது.
சரி, இப்போது அந்த தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தக்காளி - 4-5
பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 2 பற்கள் (நசுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
மிளகுப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய்/ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் தக்காளியை போட்டு 5-10 நிமிடம் வேக வைத்து, பின் குளிர வைத்து, அந்த தக்காளியின் தோலை உரித்துவிட்டு, அதனை பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்/ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அடுத்து, வெங்காயம், ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, உப்பு, சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளற வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை உடனே ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி சூப் ரெடி!!! இதன்மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications
