Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
தக்காளி ரசம்

குறிப்பாக ரசத்திலேயே தக்காளி ரசம் மிகவும் சுவையுடன் இருக்கும். மேலும் தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ளது. எனவே அத்தகைய தக்காளியை வைத்து ரசம் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களை பெறலாம். சரி, இப்போது அந்த தக்காளி ரசத்தை எப்படி வைப்பதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் தக்காளியையும் போட்டு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் மிளகு, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சிறிது கறிவேப்பிலை போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் தக்காளியைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி ரசம் ரெடி!!! இதில் கொத்தமல்லியை போட்டு சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாற வேண்டும்.



Click it and Unblock the Notifications
