Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சுவையான பன்னீர் வெஜிடேபிள் குருமா
பன்னீர் பிரியர்களுக்காக ஒரு அருமையான பன்னீர் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை பகிர்ந்துள்ளது. இந்த ரெசிபியானது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் எளிதில் செய்யக்கூடியது. ஏனெனில் இந்த ரெசிபியில் பல்வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறோம்.
அதிலும் இந்த ரெசிபி சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். இப்போது அந்த பன்னீர் வெஜிடேபிள் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
குடைமிளகாய் - 1 (சிறியது, நறுக்கியது)
பீன்ஸ் - 8-10 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2 (சிறியது, நறுக்கியது)
பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
காளான் - 8 (நறுக்கியது)
முந்திரி - 1/2 கப்
வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பச்சை ஏலக்காய் - 3
கிராம்பு - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 1/2 கப்
பிரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன் (அலங்கரிக்க)
செய்முறை:
முதலில் முந்திரியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி, காய்கறிகள் அனைத்தையும் போட்டு, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, பின் நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து சிறிது நேரம் தாளித்து, பின் வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகு தூள் மற்றும் தயிர் சேர்த்து, கெட்டி சேராதவாறு கிளறி விட்டு, பிறகு அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து, அதில் வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து, 1/2-1 கப் தண்ணீர் ஊற்றி 3-4 நிமிடம் கிளறி விட்டு, பின் பன்னீர் துண்டுகள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, தட்டு கொண்டு மூடி 4-5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, மேலே பிரஷ் க்ரீம் கொண்டு அலங்கரித்தால், சுவையான பன்னீர் வெஜிடேபிள் குருமா ரெடி!!! இது சாப்பத்திக்கு மிகவும் சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications