Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
சுவையான உருளைக்கிழங்கு தக்காளி ரெசிபி
உருளைக்கிழங்கை கொண்டு செய்யும் ரெசிபிக்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. ஏனெனில் அந்த அளவில் உருளைக்கிழங்கைக் கொண்டு பலவாறு சமைக்கலாம். அந்த வகையில் இங்கு வெங்காயம் சேர்க்காமல், வெறும் தக்காளி மட்டும் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான உருளைக்கிழங்கு ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4-5
தக்காளி - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி, 4 துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
* பின் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளித்து, மிளகாய் தூள், தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு குக்கரை திறந்து அதில் உள்ள உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்து, லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வாணலியில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின் பச்சை மிளகாய், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறி, லேசாக மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக் வதக்கி இறக்க வேண்டும். ஒருவேளை கிரேவி போன்று வேண்டுமானால், சிறிது தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடலாம்.
* இப்போது சுவையான உருளைக்கிழங்கு தக்காளி ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications
