Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
காரமான... வெஜிடேபிள் தால்

தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 2 (தோலுரித்து, சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை நீரில் 20-25 நிமிடம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் இந்த பருப்புகளைப் போட்டு, உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
அதே சமயம் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் கேரட், குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, 4-6 நிமிடம் நன்கு கேரட் மற்றும் குடைமிளகாய் வேகும் வரை வதக்க வேண்டும்.
காய்கறிகள் வெந்ததும், அதில் தக்காளி, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு அதில் குக்கரில் இருக்கும் பருப்புக் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் மாங்காய் பொடியை சேர்த்து, கிளறி இறக்கிவிட வேண்டும்.
இப்போது காரமான வெஜிடேபிள் தால் ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
