Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
சிம்பிளான... காளான் கிரேவி
உங்களுக்கு அசைவம் சாப்பிட பிடிக்கவில்லையா? ஆனால் அசைவ உணவின் சுவையை ருசிக்க விருப்பமா? அப்படியெனில் காளானை சமைத்து சாப்பிடுங்கள். அதுவும் சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக காளானை கிரேவி செய்து சுவையுங்கள்.
உங்களுக்கு எளிய முறையில் காளான் கிரேவியை செய்யத் தெரியுமா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு காளான் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
காளான் - 1 பாக்கெட்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 இன்ச்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளியானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி குளிர வைத்து, மிப்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டூ பேஸ்ட் சேர்த்து வதக்கி, காளானையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காளான் கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications
