Latest Updates
-
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்..
ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் படிக்கும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் கொடுத்தால், அவர்களின் மூளை நன்கு செயல்படும். அத்தகைய வெண்டைக்காளை சற்று வித்தியாசமாக ராஜஸ்தான் ஸ்டைலில் ஃப்ரை செய்து கொடுத்தால், உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இங்கு அந்த ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 20
உள்ளே வைப்பதற்கு...
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் 'உள்ளே வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் வெண்டைக்காளின் முனைகளை நீக்கிவிட்டு, இரு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
அதனை நீளவாக்கில் வெட்டி அதன் நடுவே அந்த பேஸ்ட்டை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெண்டைக்காயை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
பின் மூடியைத் திறந்து, நன்கு மொறுமொறுவென்று வரும் வரை கிளறி இறக்கினால், ராஜஸ்தானி வெண்டைக்காய் ஃப்ரை ரெடி!!!



Click it and Unblock the Notifications
