Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
வாழைக்காய் பொரியல்: வீடியோ
வாழைக்காய் கொண்டு எப்படி பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? இங்கு அந்த வாழைக்காய் பொரியலின் எளிமையான செய்முறை வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெசிபியானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.
சரி, இப்போது அந்த வாழைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை வீடியோவைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு தட்டு கொண்டு மூடி வைத்து மீண்டும் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இறுதியில் காயானது நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காயை தூவி நன்கு கிளறி இறக்கினால், வாழைக்காய் பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
