Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
ஆந்திரா ஸ்பெஷல் பெப்பர் காளான்: வீடியோ
மழைக்காலம் ஆரம்பமாகிவிட்ட நிலையில், எப்போதுமே நன்கு காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதிலும் மழைக்காலத்தில் காளான் அதிகம் கிடைப்பதால், அதனை அருமையான ஆந்திரா ஸ்டைலில் சமைத்து, மதியம் சைடு டிஷ்ஷாக சாப்பிட்டால் இன்னும் சூப்பராக இருக்கும். இங்கு ஆந்திரா ஸ்டைல் பெப்பர் காளான் ரெசிபியானது கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் பெப்பர் காளான் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து செய்து பார்த்து சுவை எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/EssMwlhcqHw?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 250 கிராம் (சுத்தம் செய்து நறுக்கியது)
சீரகம் - 5 கிராம்
நறுக்கிய பூண்டு - 10 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்ழுன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள காளானை போட்டு, தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, ஒரு கொதி விட்டு இறக்கி, அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, பின் காளானை சேர்த்து நன்கு 5 நிமிடம் பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், பெப்பர் காளான் ரெடி!!!



Click it and Unblock the Notifications
