Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
ஈஸியான... பன்னீர் புலாவ்!!!

தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 4 கப்
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 2
மிளகு - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
பன்னீர் - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 8 கப் தண்ணீர் விட்டு, அதில் அரிசியை கழுவிப் போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அரிசியை வேக விடவும்.
பின் அரிசி வெந்ததும், அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விட்டு, தனியாக எடுத்து வைக்கவும். பின் மிக்ஸியில் பச்சை மிளகாயை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதனை சூடேற்றி, எண்ணெய் விட்டு காய வைக்கவும்.
பின் அதில் ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் மிளகு போட்டு, நன்கு வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, 1-2 நிமிடம் வதக்கி, அதில் பன்னீரை சேர்த்து, தீயை குறைவில் வைத்து சற்று நேரம் வதக்கவும்.
இப்போது அதில் வேகத்துள்ள அரிசி மற்றும் சிறிது உப்பு சேர்த்து, 2-3 நிமிடம் கிளறவும்.
பின்பு அதில் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து, மறுபடியும் 2-3 நிமிடம் வதக்கவும்.
இப்போது சுவையான பன்னீர் புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
