Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
ஈஸியான... பன்னீர் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
பூண்டு - 4 பல் (அரைத்தது)
பன்னீர் - 1/4 கப் (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது அதில் நூடுல்ஸை போட்டு, சிறிது உப்பு மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மூடி, தீயை குறைவில் வைத்து 2-3 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, வெங்காயம், குடைமிளகாய், கேரட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் உப்பை சேர்த்து, ஒரு முறை கிளறி தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் வேக வைக்கவும்.
பின் அத்துடன் மிளகு தூள், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸை சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைத்து, பின் அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸை போட்டு, அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் நூடுல்ஸ் உடன் சேரும் வரை நன்கு கிளறி இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் நூடுல்ஸ் ரெடி!!!



Click it and Unblock the Notifications
