Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பசலைக்கீரை பொரியல்
பசலைக்கீரையின் நன்மைகளைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் இதன் நன்மைகளைப் பற்றி பலமுறை படித்திருப்போம். சிலருக்கு இந்த பசலைக்கீரையை கடைந்து சாப்பிட்டால் பிடிக்காது. அத்தகையவர்கள் இதனை பொரியல் செய்து சாப்பிடலாம்.
இங்கு பசலைக்கீரையைக் கொண்டு எப்படி பொரியல் செய்வது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து இன்று செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை - 2 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
பின்பு அதில் பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் பசலைக்கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து, 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு, பின் அதில் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பசலைக்கீரை பொரியல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
