Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வேப்பம்பூ ரசம்

சரி, இப்போது அந்த வேப்பம்பூ ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 (நன்கு கனிந்தது)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேப்பம்பூ - 1 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், வேப்பம்பூவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் புளியை தண்ணீரில் போட்டு உப்பு ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
குக்கரில் உள்ள விசிலானது போனதும், குக்கரை திறந்து, பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் மிளகு, சீரகம், வர மிளகாய் மற்றும மல்லி சேர்த்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, புளி தண்ணீர், அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பிறகு தக்காளி சேர்த்து கொதிக்க விடவும். கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதி லவறுத்து வைத்துள்ள வேப்பம்பூ மற்றும் கொத்தமல்லியை தூவி இறக்கி, அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் வேப்பம்பூவில் உள்ள கசப்பு அதிகமாக இறங்காமல் இருக்கும்.
இறுதியில் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சேர்த்தால், சுவையான வேப்பம்பூ ரசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications
