Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி: ஸ்பெஷல் நவராத்திரி ரெசிபி
நவராத்திரி என்றால் எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார், பருப்பு என்று பழைய ஸ்டைலைத் தான் பின்பற்ற வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இல்லை. ஆகவே இந்த நவராத்திரிக்கு செய்யக்கூடியவாறு ஸ்பெஷலாக பசலைக்கீரை மற்றும் கொண்டைக்கடலை கம்பினேஷனில் ஒரு கிரேவி செய்யலாம். இந்த ரெசிபி வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, உடலுக்கு மிகவும் நல்லது.
சரி, இப்போது நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபியான பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 2 கப் (ஊற வைத்தது)
பசலைக் கீரை - 1 கட்டு
தேங்காய் பால் - 1 1/2 கப்
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
பூண்டு - 4 பெரிய பற்கள் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
இஞ்சிப் பொடி - 1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் இஞ்சி, பூண்டு, தக்காளி, எலுமிச்சை சாறு, சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அடுத்து கொண்டைக்கடலையை சேர்த்து, கொண்டைக்கடலை பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.
பின்பு பசலைக் கீரையை சேர்த்து, கீரை நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.
கீரையானது நன்கு வதங்கியதும், அதில் தேங்காய் பால், உப்பு, இஞ்சி பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொண்டைக்கடலை வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான பசலைக்கீரை கொண்டைக்கடலை கிரேவி ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
