Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மஸ்ரூம் கார்ன் மசாலா

தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம் (நறுக்கியது)
சோள மணிகள் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி, உப்பு, மல்லித்தூள், மிளகாய் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்கி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
பின்னர் அதனை குளிரை வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, மசாலா மற்றும் எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
இந்த பதம் வந்த பின்னர், அதில் சோள மணிகள் மற்றும் காளானை சேர்த்து, அவை வேகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.
பின்பு காளான் மற்றும் சோள மணிகள் வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மஸ்ரூம் கார்ன் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
