Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மசாலா பாத்
காலை வேளையில் சற்று வேகமாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் காய்கறிகளை சேர்த்து ஒரு கலவை சாதம் செய்து, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் கணவருக்கு கொடுத்தால், மதிய வேளையில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும் தானே?
அப்படியெனில் அதற்கு மஹாராஷ்ரா ஸ்பெஷல் ரெசிபியான மசாலா பாத் சரியானதாக இருக்கும். மேலும் இதனை மதிய வேளையில் கூட வெள்ளை சாதம் சமைப்பதற்கு இந்த மசாலா பாத் சமைத்து, குழம்புடன் சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அந்த மசாலா பாத்தை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப்
கத்தரிக்காய் - 2 (நீளமாக நறுக்கியது)
கோவைக்காய் - 5 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை கழுவி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
பின் கத்தரிக்காய் மற்றும் கோவைக்காயை நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைக்கும் போது சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை போட்டு நிமிடம் வறுத்து இறக்கி, பின் குளிரை வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும்.
நன்கு வதக்கியதும், தீயை சற்று உயர்த்தி, கழுவி வைத்துள்ள அரிசி, உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு, குக்கரை மூடி 1-2 நிமிடம் விசில் விட்டு இறக்க வேண்டும்.
இப்போது அருமையான மசாலா பாத் ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications